உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிமேற்கோள்:நிர்வாகிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

நிர்வாகிகள் "கட்டக இயக்குனர் (sysop) உரிமை"யுள்ள விக்கிமேற்கோள் பயனர்கள். இவர்களது பணியின் பண்புகளைத் துல்லியமாக உணர்த்தும் வண்ணம் பல வேளைகளில் இவர்கள் முறைமைச் செயற்படுத்துநர்கள் என்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. சில காலம் விக்கிமேற்கோளில் செயற்பாடுள்ள பங்களிப்பாளராக இருப்பதுடன், பொதுவாக அறியப்பட்ட, நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் உறுப்பினர் எவருக்கும் இந்தப் பொறுப்பை வழங்குவது, தற்போது விக்கிமேற்கோளின் கொள்கையாக இருந்துவருகிறது. நடைமுறையில் சீர்தரங்கள்(standards) கடினமடைந்து வருகின்ற போதிலும், நிர்வாகிகள் உருவாக்கப்படத்தான் செய்கின்றனர்.

நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் - நிர்வாகிகள் பட்டியல்

விக்கிமேற்கோளின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார்: "இது ஒரு பெரிய விடயமே அல்ல - This should be no big deal"

தொகுத்தல் பொறுப்புகள் தொடர்பில், நிர்வாகிகளுக்குச் சிறப்பு அதிகாரங்கள் எதுவும் கிடையாது என்பதுடன், அவர்கள் ஏனைய பயனர்களுக்குச் சமமானவர்களே. இவர்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, செயற்பாடு மற்றும் பாதுகாப்பு அடிப்படையிலமைந்த பல்வேறு கட்டுப்பாடுகளிலிருந்து இவர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்துப் பயனர்களினதும் தீர்மானங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது தவிர வேறெந்த சிறப்பு அதிகாரங்களும் இவர்களுக்குக் கிடையாது என்பதைக் கவனிக்கவும். மேலதிக நிர்வாகச் செயற்பாடுகள் எதுவும் கொடுக்கப்படாதபோதும், பொய்யாகத் தாங்கள் நிர்வாகிகளென உரிமை கோராதவரை, எந்தப் பயனரும் ஒரு நிர்வாகி போலவே நடந்துகொள்ள முடியும். இவ்வாறான பயனர்கள் வேறு பயனர்களால் நிர்வாகி பொறுப்புக்கு நியமனம் செய்யப்படவும், பின்னர் அப் பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்படவும் கூடிய சந்தர்ப்பம் உண்டு.

நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகின்ற மேலதிக அணுக்கம் தேவைப்படும் வேலைகளைச் செய்வதற்காக, இச் சமுதாயம் நிர்வாகிகளை எதிர்பார்த்துள்ளது. இவற்றுள், நீக்கலுக்கான வாக்களிப்பு விவாதங்களைக் கவனித்தல், ஒருமனதான தீர்மானங்களின் அடிப்படையில் கட்டுரைகளை நீக்குதல் அல்லது அவற்றை வைத்திருத்தல், புதிய மற்றும் மாற்றப்படுகின்ற கட்டுரைகளைக் கவனித்து வெளிப்படையான நாசவேலைகளை நீக்கிவிடல், மற்றும் நிர்வாகி அணுக்கம் தேவைப்படும் விடயங்களில் பிற பயனர்களால் கோரப்படும் உதவிகளைச் செய்தல் என்பன அடங்கும். நிர்வாகிகள், சமுதாயத்தின் அநுபவம் உள்ள உறுப்பினர்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுவதால், உதவி தேவைப்படும் பயனர்கள், ஆலோசனைகளுக்கும் தகவல்களுக்கும் ஒரு நிர்வாகியையே பொதுவாக நாடுவர்.

சரி, (நிர்வாகிகள்) என்னதான் செய்வார்கள்?

[தொகு]

விக்கி மென்பொருள் சில முக்கிய கட்டுப்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இவ்வாறான அம்சங்களுள் பின்வருவனவற்றை நிர்வாகிகள் அணுக முடியும்.

காப்புச் செய்யப்பட்ட பக்கங்கள்

[தொகு]
  • காப்புச் செய்யப்பட்ட பக்கங்களை நேரடியாகத் தொகுத்தல்.
  • பக்கங்களைக் காப்புச் செய்தலும், காப்பு நீக்குதலும். வெகு அருமையான சந்தர்ப்பங்களில் மட்டுமே பக்கங்கள் காப்புச் செய்யப்படுகின்றன. விக்கிமேற்கோள்:காப்புக் கொள்கைகள் பக்கம் பார்க்கவும்.

நீக்குதலும், மீள்வித்தலும்

[தொகு]
  • பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் நீக்குதல். வழிகாட்டல்களுக்காக விக்கிமேற்கோள்:நீக்குதல் கொள்கை மற்றும் விக்கிமேற்கோள்:நிர்வாகிகளுக்கான நீக்கல் வழிகாட்டல்கள் பக்கங்களைப் பார்க்கவும். ஒரு பக்கத்தை நீக்குவதற்கான பரிந்துரையை விக்கிமேற்கோள்:நீக்கலுக்கான வாக்கெடுப்பு பக்கம் பார்க்கவும். நீக்கல் சிலசமயம் தொழில்நுட்பக் காரணங்களுக்காகச் செய்யப்படுகின்றது. இங்கே ஒரு கட்டுரையைப் பெயர்மாற்றம் செய்வதற்காக ஒரு வழிமாற்றுப் பக்கம் நீக்கப்பட வேண்டியிருக்கலாம், துண்டு துண்டாக இருக்கும் வரலாற்றைக் கொண்ட பக்கமொன்றை நீக்கித் துண்டுகளைப் பொருத்த வேண்டியிருக்கலாம். வேறு சமயங்களில், உண்மையான உள்ளடக்கமற்ற பக்கங்களை நீக்கிச் சுத்தப்படுத்துவதற்கும், அல்லது பதிப்புரிமையை மீறும் வகையில் வேறு தளங்களிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டவற்றை நீக்குவதற்குமாக இருக்கலாம்.

மீள்வித்தல்

[தொகு]
  • கட்டுரைகளை கடிந்து மீள்விக்கலாம். எந்தவொரு பயனரும் (புகுபதிகை செய்தவரோ செய்யாதவரோ) ஒரு கட்டுரையை அதன் முந்தய பதிப்பிற்க்கு மீள்விக்க முடியும். நிர்வாகிகள், அனாமதேய தொகுப்பாளர்களின் நாசவேலைகளை களைய உதவகூடிய வகையில், துரிதமாய் இயங்கவல்ல தானியங்கி மீள்வு கருவிகளை பெற்றிருப்பர். பிற பயனர்களின் பங்களிப்புகளை காண்கையில், [rollback] என்று காட்சியளிக்கும் ஒரு சுட்டி பகுப்பு வரலாற்றில் மேலேயிருக்கும் பகுப்புகளின் அருகில் தோன்றும். இச்சுட்டியை சொடுக்குவதன் மூலம் குறிப்பிட்ட அப்பயனரால் செய்யப்பெறாத கடைசி தொகுப்பிற்க்கு அப்பக்கத்தை மீள்வித்து, "x பயனரால் செய்யப்பெற்ற பகுப்புகள் y பயனரால் பகுக்கப்பெற்ற கடைசி பதிப்பிற்க்கு மீள்விக்கப்பட்டது" என்ற தொகுப்பு சுருக்கத்துடன் அதை ஒரு சிறு தொகுப்பாகவும் பதியும்.

நடுவர் குழு முடிவுகளை நிறைவேற்றல்

[தொகு]

நிர்வாகிகள், நடுவர் குழு முடிவுகளை நிறைவேற்றும் அதிகாரம் பெற்றுள்ளார்கள்.


நாசவேலைகளை அண்மைய மாற்றங்கள் பக்கத்திலிருந்து மறைத்தல்

[தொகு]

தடுத்தலும், தடை நீக்குதலும்

[தொகு]
  • ஐபி முகவரிகள், ஐபி எல்லைகள், பயனர் கணக்குகள் என்பவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்தல்.
  • ஐபி முகவரிகள், ஐபி எல்லைகள், பயனர் கணக்குகள் என்பவற்றின் தடை நீக்குதல்.

தரவுத்தள வினவுத்தேடல்

[தொகு]
  • சிறப்பு:asksql சுட்டி செயல்படுத்தப் பட்டிருந்தால், நிர்வாகிகள் வாசிக்க மட்டுமேயான வினவுத்தேடல்களை தரவுத்தளதில் நிகழ்த்தலாம். அச்சுட்டி செயல்படுத்தப் பெறாமலோ, அல்லது தாங்கள் SQL-ஐ உபயோகிப்பதில் முழுதும் உறுதியாய் இல்லாமலோ, அல்லது தாங்கள் ஒரு நிர்வாகியல்ல என்றாலோ, தங்கள் சார்பில் ஒரு வினவுத்தேடலை நிகழ்த்த இங்கே கோரலாம்: விக்கிமேற்கோள்:எசுகுயூஎல் வினவு வேண்டுதல்கள். பயனர்கள் 30 நொடிக்கும் மேலாக அவகாசம் கொள்ளும் வினவுத்தேடலை நிகழ்த்த விரும்பினால், அவர்கள் மீள்சேமிப்பு கிடங்கையும் (backup dump) MySQL தரவுதளத்தையும் பதிவிறக்கம் செய்து பின்னர் தங்கள் கணினியிலேயே அவ்வினவுத்தேடலை நிகழ்த்த வேண்டும். பத்து நொடிகளுக்கு மேல் அவகாசம் தேவைப்படும் எந்தவொரு வினவுத்தேடலையும் நிகழ்த்த வேண்டாம் என விக்கிமேற்கோள்:தரவுத்தள வினவுகள் பரிந்துரைக்கின்றது.

இடைமுகத்தின் வடிவமைப்பும், சொற் பயன்பாடும்

[தொகு]

நிர்வாகியாதல்

[தொகு]

நீங்கள் கட்டக இயக்குனர் அணுக்கம் பெற்றுக்கொள்வதை விரும்பினால் உங்கள் பெயரை விக்கிமேற்கோள்:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் அங்குள்ள வழிகாட்டல்களுக்கு அமையப் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நிர்வாகியாக வேண்டுமா என்பது தொடர்பாக ஏனைய தொகுப்பாளர் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெறும்.

ஏனைய பயனர்கள் உங்களை அடையாளம் கண்டு உங்கள் கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டியிருப்பதால், நிர்வாகி தரத்தைக் கோரமுன், சிறிது காலம் விக்கிமேற்கோளுக்கு எழுதுமாறு உங்களுக்கு ஆலோசனை கூறப்படுகின்றது.

தயவுசெய்து, கவனமாக இருங்கள்! உங்களுக்கு இந்தத் தகுதி வழங்கப்பட்டால், உங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது கவனத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். முக்கியமாக, பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் நீக்குதல், படிமங்களை நீக்குதல் (இது நிரந்தரமானது), ஐபி முகவரிகளைத் தடுத்தல் என்பனவற்றைக் கவனமாகச் செய்யுங்கள்.

ஏனைய அணுக்க வகைகள்

[தொகு]

நிர்வாகிகளுக்குப் புறம்பாக, வேறு வகைப் பயனர்களும் உள்ளனர். இவற்றின் பட்டியல் அண்ணளவான அதிகார ஏறுவரிசைப்படி கீழே தரப்பட்டுள்ளன.

பதிவு செய்துகொண்ட பயனர்கள்

[தொகு]

சாதாரண அணுக்கம் கொண்ட பயனர்கள்,"புகுபதிகை செய்யாத" வருனர்கள் உட்பட, தமிழ் விக்கிமேற்கோள்ளின் பெரும்பாலான பணிகளைச் செய்ய முடியும். கட்டுரைகளைத் தொகுக்கவும் விக்கிமேற்கோள் துப்புரவுப் பணிகளுக்கு உதவுவதும் இதில் அடங்கும்.

ஆனால் புகுபதிகை செய்து கொண்ட பயனர் மட்டுமே கோப்புகளை பதிவேற்றுதல், கோப்புகளின் பெயர்களை மாற்றுதல், கோப்புகளை இடம்பெயர்த்தல் போன்றவற்றை செய்யமுடியும். புதிய புகுபதிகை கணக்கு துவங்க இங்கே செல்லவும்.

அதிகாரிகள்

[தொகு]

அதிகாரி தரத்தில் உள்ள பயனர்கள் பிற பயனர்களை நிர்வாகிகள் ஆக்க முடியும். ஆனால் நிர்வாகி தரத்திலிருந்து ஒரு பயனரை நீக்கும் உரிமை கிடையாது. ஏற்கெனவே அதிகாரிகள் தரத்தில் உள்ளவர்களைக் கொண்ட திட்டங்களில், அதிகாரிகளைப் பிற அதிகாரிகளே உருவாக்குகிறார்கள். அதிகாரிகள் எவரும் இல்லாத திட்டங்களில் மேலாளர் (steward) தரத்தில் உள்ளவர்கள் அத்திட்டத்துக்கான புதிய அதிகாரியை உருவாக்கலாம். நிர்வாகச் செயற்பாடுகள், பதிகை/உரிமைகள் மற்றும் விக்கிமேற்கோள்:அதிகாரி பதிகைகள் ஆகிய பக்கங்களில் பதியப்படும். மேலாளர்களினால் செய்யப்படும் நிர்வாகச் செயற்பாடுகள் மெடா:பதிகைகள்/உரிமைகள் பக்கத்தில் பதியப்படும்.

மேலாளர்கள்

[தொகு]

"மேலாளர்" தகுதி உள்ள பயனர்கள் எந்தவொரு விக்கித்திட்டத்திலும் எந்தப் பயனரின் அணுக்கத்தையும் மாற்றக்கூடிய உரிமை கொண்டவர். இது கட்டக இயக்குனர் அணுக்கத்தைக் கொடுப்பதும் எடுப்பதும் பயனர்களை தானியங்கியாக குறிப்பதும் உள்ளிட்ட செயல்களை உள்ளடக்கியது. அவர்களது செயல்பாடுகள் மெடா:அதிகாரி பதிகைகள் பக்கத்தில் பதியப்படும். அவர்களது உதவியை நாட உரிமை கோரல்கள் பக்கத்தில் பதிய வேண்டும். பொதுவாக, உள் அதிகாரி செய்யக்கூடிய செயல்பாடுகளை அவர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

உருவாக்குனர்

[தொகு]

மிக உயர்ந்த நுட்ப அணுக்கம் (உண்மையில் பலநிலைகளில், பயனர்களுக்கு இவற்றினிடையே உள்ள வேறுபாடு தெரியாது) "உருவாக்குனர் (developer)" பெறுகிறார். இவர்கள் விக்கிமேற்கோள் மென்பொருள் மற்றும் தரவுத்தளத்தில் மாற்றங்கள் செய்யும் உரிமை கொண்டவர்கள். இவர்கள், பெரும்பாலும்,போலிப் பயனர் (sock puppetry) சோதனைகள் மற்றும் தொகுப்புகளின் பங்களிப்பாளரை மாற்றுவது போன்ற ஒருசிலவற்றைத் தவிர பிற நிர்வாகப் பணிகள் செய்வதில்லை. இவர்களது உதவியை நாட விக்கிநுட்பம் - L பக்கத்தைப் பார்க்கவும். உருவாக்குனர் பக்கத்தில் உருவாக்குனர்கள் பட்டியலும் மேல் விவரங்களும் பார்க்கலாம்.

நிர்வாகி முறையற்ற செயற்பாடு

[தொகு]

நிருவாகிகள் தங்கள் உரிமைகளை தவறாகப் பயன்படுத்தினால் அவர்களை நீக்க முடியும். தற்போது விக்கிமேற்கோள் நிறுவனர் ஜிம்போ வேல்ஸ் ஆணையாலோ நடுவர் குழு தீர்ப்பினாலோ நீக்க முடியும். அவர்களால் பிரச்சினைக்குரிய நிருவாகிகளுக்கு அவர்களது மதிப்பீட்டின்படி குறைந்த அளவு தண்டனையும், காட்டாக சில அதிகாரங்கள் தடுக்கப்படுதல், கொடுக்கப்படலாம். நுட்ப அளவில் நிருவாக அணுக்கத்தை நீக்கக்கூடிய அதிகாரம் மேலாளர்களுக்கு உள்ளது.

கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முனைதல்

[தொகு]

ஒரு நிருவாகி உங்களுக்கோ அல்லது பிற பயனர் ஒருவருக்கோ எதிராக தவறான முறையில் நடந்துகொண்டார் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் உங்கள் கவலை மற்றும் கருத்தை அப்படி நடந்து கொண்ட நிருவாகியிடம் தெரிவிக்க வேண்டும். அத்து மீறாமல், முறைப்படி கருத்தாடி ஒரு முடிவுக்கு வர முயலுங்கள். அப்படி ஒரு இணக்க முடிவுக்கு வர இயலவில்லை என்றால், மேற்கொண்டு விக்கிமேற்கோள் கருத்து வேறுபாட்டுத் தீர்வுக் கொள்கை (விக்கிமேற்கோள்:பிணக்கு தீர்வு)யின் படி நடவடிக்கை எடுத்து முடிவுக்கு வரலாம். இது தவிர பல்வேறு மாற்று முறைகள் (நிருவாகி தகுதி நீக்கம்) பரிந்துரைக்கப்பட்டுள்ளன ஆனால் அவை எதுவும் பொது ஏற்பு பெறவில்லை (இணக்க முடிவு).