அக்பர்
Appearance
சலாலுத்தீன் முகமது அக்பர் அல்லது பேரரசர் அக்பர் (Akbar, 15 அக்டோபர் 1542 – 27 அக்டோபர் 1605) முகலாயப் பேரரசின் மன்னராக 1556 முதல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர்.
அக்பரின் மேற்கோள்கள்
[தொகு]- நற்செயலின் மேன்மையைக் கருதியே அதைச் செய்ய வேண்டும். அதனால் வரும் லாப நட்டங்களைக் கருதியல்ல.
- இறைச்சி உண்பவர்கள் ஒருவரையொருவர் கூடக் கொன்று தின்று விடுவார்கள். அதனால் ஏற்படும் துன்பம் இல்லாதிருக்குமானால், என் உடலில் கூட சிறு பகுதிகளே இறைச்சி உண்பவர்களுக்காக வெட்டித் தருவேன், அப்பகுதிகள் உடனே வளர்ந்து விடக்கூடுமானல், எல்லா மக்களுக்கும் போதுமான உணவு கிடைக்கக் கூடுமானால், மக்கள் இறைச்சி உண்பதையே தடைசெய்து விடுவேன்.[1]
அக்பர் குறித்து பிறர் கூறியது
[தொகு]- நான் இன்று உங்களுக்கு வழங்கும் இந்தக் கஸ்தூரியின் மணத்தைப்போல், என் மகனுடைய புகழ் இப்புவியெங்கும் பரவட்டும். -ஹிமாயூன் (15-10-1542) (அக்பரின் தந்தை)[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 5. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.