உள்ளடக்கத்துக்குச் செல்

கொலை

விக்கிமேற்கோள் இலிருந்து
ஈராக்கில் ஒரு படைவீரர்

கொலை என்பது ஒரு மனிதரை இன்னொரு மனிதர் கொல்வது அல்லது மரணம் அடையச் செய்வதாகும். பொதுவான சூழ்நிலைகளில் கொலை ஒரு குற்றச்செயலாகவே கருதப்படுகிறது. ஆனால் போர், எதிர்ப்புப் போராட்டம் போன்ற சூழ்நிலைகளில் கொலை தொடர்பான ஒரு தெளிவான அற நிலைப்பாடு உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  • கொலைச் செயலின் பிண்ணணியைப் பொறுத்து அது நியாயமான தற்காப்பு என்றோ, கொலை என்றோ, போர் என்றோ, நாகரிகம் என்றோ, அழைக்கப்படுகின்றது. ஒரு மனிதன் தன் சக மனிதனைக் கொல்லும் நிகழ்வை எடுத்துக்கொள்ளலாம்; அதில் ஒரு பெண்ணைச் சேர்த்துவிட்டால் அதுவே ஆணவக் கொலை ஆகிறது. ஒரு தேசியக் கொடியைச் சேர்த்தால் அது போர், இவை எதுவும் இல்லாதபோது குற்றம் ஆகிறது. நாம் வாழும் காலத்தின் அடிப்படை க் கேள்வி கொலை செய்வதில் இருந்து நம்மை தடுப்பது எது என்று தெரிந்துகொள்வதுதான். ஆனால் எல்லாவற்றையும்விட முக்கியமானது மனித வாழ்கையின் புனிதத்தை நாம் எப்படி வரையறுக்கிறோம் என்பதுதான். - காமெல் தாவுத், (Kamel Daoud) அல்ஜீரிய எழுத்தாளர்[1]
  • சிறை. விலங்கு இருட்டறை ஆகியவற்றுள் எதுவும் தனிமை, கொலைஞனிடம் பேசும் குரலைப் போல் பேசுவதில்லை. -மெச்சூரின்
    • (ஏகாந்தமே கொலைஞனுடைய இதயத்தை அதிகமாக வருத்தும்) [2]
  • கொலைதான் பரிகாரமேயில்லாத முதன்மையான குற்றம். இயற்கையே கொலையால் நடுங்குகின்றது. - காஃப்[2]
  • சிந்திய இரத்தம், சிறிது காலம் உறங்கிக் கிடந்தாலும் அது ஒரு போதும் செத்தொழிவதில்லை. - சாப்மன்[2]
  • உடலைக் கொலை செய்வது போல்தான் ஒருவருடைய குணத்தைத் கொலை செய்வதும். - டி. எட்வர்ட்ஸ்[2]
  • கண்ணியமானவர்மீது உண்மைக்கு மாறாகக் குற்றம் சாட்டுதலும் ஒரு வகைக் கொலைதான்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. இந்து தமிழ் நாளிதழ், பக்கம் 6, நாள்: 11 நவம்பர், 2019
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 167. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கொலை&oldid=21080" இலிருந்து மீள்விக்கப்பட்டது