ராமாபாய்

விக்கிமேற்கோள் இலிருந்து
ராமாபாய்

பண்டிதை ரமாபாய் சரஸ்வதி (23 ஏப்ரல் 1858 - 05 ஏப்ரல் 1922) (Pandita Ramabai) என்பவர் ஒரு பெண்ணுரிமைப் போராளியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய பெண்மணி ஆவார். பிராமணக் குடும்பத்தில் பிறந்து பின்னர் கிறித்தவ மதத்துக்கு மாறிய சமூக சீர்திருத்தவாதி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • பெண் வைத்தியர்களைக் குறித்து ஒரு வார்த்தை கூறுகிறேன். இந்தியாவெங்கும் ஆண் வைத்தியர் இருந்த போதிலும் பெண் வைத்தியர் மிகக் குறைவு. இத்தேசத்துப் பெண்கள் மற்றெந்தத் தேசத்துப் பெண்களைப் பார்க்கிலும் மிக்க நாணமுள்ளவராகையால், தங்கள் வியாதிகளையும் கஷ்டங்களையும் அயலானொருவனிடம் சொல்லுவதைப் பார்க்கிலும் தங்கள் உயிர் போவதே நலமெனக் கருதுவர். மகளிர் பலர் அகால மரணத்திற்கு முக்கிய காரணம் பெண் வைத்தியர் இல்லாத குறைதான். ஆகையால், பெண்களுக்கென்று ஒரு வைத்திய கலாசாலை நிறுவும்படி நான் அரசாங்கத்தாரை மிக்க பரிவுடன் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இந்து தேசத்துப் பெண்களுக்குப் பெண் வைத்தியர் மிக மிக அவசியம். (1882-ல் பூனா நகரத்தில்)[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 9-10. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ராமாபாய்&oldid=17971" இலிருந்து மீள்விக்கப்பட்டது