குன்றக்குடி அடிகளார்
Appearance
குன்றக்குடி அடிகளார் (சூலை 11, 1925 - ஏப்ரல் 15, 1995) சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
இவரது மேற்கோள்கள்
[தொகு]- ஒருமைப்பாடு - ஒருமைப்பாடு மனித நேய அடிப்படையில் மட்டுமே உருவாகும்.[1]
- இலக்கியம் - இலக்கியங்கள் வாழ்க்கையின் மாற்றங்களுக்காகவே தோன்றின. ஆனால் நடைபெற்றிருப்பது உரை விளக்கமே.
- சமுதாயம் - கோடி, செங்கல்கள் கொட்டிக் கிடந்தால் கட்டடமாகிவிடுமா? அவற்றை முறையாக அடுக்கினால் வீடு! அதுபோல கோடிக்கணக்கில் மனிதர்கள் இருந்தாலும் சமுதாயம் தோன்றி விடுவதில்லை. ஒருவரை ஒருவர் தழுவியும் தாங்கியும் ஒப்புரவு அறியும் பண்புடன் வாழ்ந்தாலே சமுதாயம் தோன்றும்.
- கேள்வி - திறந்த வீட்டுக்கு நல்ல காவல் தேவை. அதுபோல காதுகளைத் தருவதில் கவனம் தேவை.
- முயற்சி - ஒரு மூச்சு கொள்முதல், ஒரு மூச்சு விடுதல் இதைப்போல வாழ்க்கையின் எந்த ஒரு செயலிலும் கொள்முதலும் விடுதலும் இருக்கவேண்டும்.
- கல்வி - வாழ்க்கை முழுவதும் நூல் படிக்கும் பழக்கம் தொடரின், இன்பம் பயக்கும்.
- ஒழுக்கம் - மனிதனை மனிதனாக மதிப்பது ஒழுக்கம்.
- உழைப்பு - வயிறு இல்லாது போனால் பலர் உழைக்கவே மாட்டார்கள்.
- நட்பு - செல்வம், செல்வாக்கு இரண்டும் ஏராளமான நண்பர்களைக் கூட்டி தரும். இதனால் பயனில்லை. துன்பத்தில் துணையாய் அமைவோரே நண்பர்கள்.
- சாதனை - மண்ணிலிருந்து மனிதரை விண்ணுக்கு ஏற்றுவது சாதனையல்ல. மண்ணை விண்ணகமாக்குவதே சாதனை.
சான்று
[தொகு]- ↑ குன்றக்குடி அடிகளார் (செப்டம்பர் 1993). சிலம்புநெறி. சென்னை: கலைவாணி புத்தகாலயம். pp. 10.