இரா. நெடுஞ்செழியன்

விக்கிமேற்கோள் இலிருந்து

இரா. நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 - சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தமிழகத்தின் இரு கழகங்களான திராவிட முன்னேற்ற கழகத்திலும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலும் பொதுச்செயலாளராகவும், நிதியமைச்சராகவும் இருந்த பெருமைக்குரியவர். ஒரு பாராட்டு விழாவின் போது அண்ணாதுரை, இவருக்கு 'நாவலர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.

இவரது மேற்கோள்கள்[தொகு]

  • நம் நாட்டில் உழவுத் தொழிலும் நெசவுத் தொழிலும் மிகப் பெரிய தொழில்களாகும். உழவுத் தொழில் உயிர் பிரச்சனை. நெசவுத் தொழில் மானப் பிரச்னை. உண்ணுவதை உனக்காக உண்ணு; உடுத்துவதைப் பிறருக்காக உடுத்து என்கிறார்கள். உண்மையிலேயே நாம் பிறருக்காகத்தான் உடுத்துகிறோம்.[1]
  • பணவசதி படைத்தவர்கள், பிள்ளை வாரிசு இல்லாதவர்கள், கல்வித்துறைக்கு நிதி உதவவேண்டும். அவர்கள் இந்தத் தலைமுறையில் செய்யும் உதவி பல தலைமுறை மாணவர்களுக்கு பயன் அளிக்கும். கல்வித் துறையில் நாம் போதிய முதலீடு செய்து முன்னேறாவிட்டால், உலக நாடுகளுடன் நாம் எந்தத் துறையிலும் போட்டிப் போட முடியாது.— (2-7-1974)[2]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • என் உடல் அமைப்பைப் பார்த்தாலே புரியும், நான் அதிக உயரம் எட்ட முடியாதவன்; அதனால்தான் எனக்குத் துணையாக அதிக உயரம் உள்ள நாவலர் நெடுஞ்செழியனையும், மற்றவர்களையும் வைத்திருக்கிறேன்: அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் இருக்கும் குறைகளை நிறைவு செய்யும் அறிவாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள். —அறிஞர் அண்ணா (7-3.1967)[3]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இரா._நெடுஞ்செழியன்&oldid=37037" இலிருந்து மீள்விக்கப்பட்டது