லாலா லஜபதி ராய்

விக்கிமேற்கோள் இலிருந்து
யங் இந்தியா இதழில் வெளிவந்த லாலா லஜபதி ராய் ஒளிப்படம்

லாலா லஜபதி ராய் என்பவர் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர்.

இவரது கருத்துகள்[தொகு]

  • கல்யாண வயதை உயர்த்த வேண்டாம்; ருது சாந்திக் காலத்தைத் தள்ளி வைத்துக் கொள்வோம் என்று வைதீகர்கள் சமாதானம் சொல்லுகிறார்கள். அவ்வாறு செய்வதற்குப் பதிலாகக் கல்யாண வயதையே தள்ளி வைத்தாலென்ன முழுகிப் போய்விடும்? என் சென்னை நண்பர்கள் அறிந்திருப்பதுபோல் சமஸ்கிருதத்தில் எனக்கு அவ்வளவு புலமையில்லாவிடினும் நானும் ஏதோ சிறிது சமஸ்கிருதம் அறிந்த வரையில், பண்டைக்காலத்தில் இந்துக்கள் அவ்வப்போது காலப் போக்குக் கேற்றவாறு நடந்து கொண்டதனால்தான் மேன்மை பெற்று விளங்கினர்கள் என்றறிந்தேன். அத்தகைய உத்தமமான முறையை இந்துக்கள் தத்துவஞான விவாதங்களாலும் நம்நாடு ஒரு நாளும் முன்னேற்றமடையாது. (14 - 4 - 1928) (சென்னை கோகலே ஹாலில்)[1]
  • நான் வேறு வகையான இந்து மதத்தில் நம்பிக்கை யுடையேன். ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசமற்றதும், பிராமணனுயினும், சண்டாளனாயினும் சமத்துவமாகச் சகல உரிமைகளுடனும் வாழச் செய்வதும், மக்களை மக்கள் தன்மையுடன் நடத்துவதுமானதுதான் என் இந்து மதம். அத்தகைய இந்துமதத்தில்தான் எனக்கு நம்பிக்கை. (14-4-1928) (சென்னை கோகலே ஹாலில்)[2]
  • நான் பெரிய பிரசங்கி என்று சொல்லிக் கொள்ளவில்லை. மேடைகளில் பேசுவதும் பிரசங்களுமே சுதந்திரப் போரில் முக்கியம்சங்களாயிருக்கின்றன. ஆனால் அது மட்டும் போதுமெனச் சொல்ல முடியாது. எனக்குத் தோன்றிய மட்டில் அத்தகைய பேச்சுககள் நமது சுதந்தரப் போரின் ஆரம்ப நிலையைச் சேர்ந்ததே என்றுதான் சொல்லுவேன். — (13-4-1928) (திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில்)[3]


குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=லாலா_லஜபதி_ராய்&oldid=18251" இலிருந்து மீள்விக்கப்பட்டது