நெ. து. சுந்தரவடிவேலு

விக்கிமேற்கோள் இலிருந்து
1940இல் தனது திருமணத்தின் பொழுது நெ. து. சுந்தரவடிவேலு

பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, Nayyadupakkam Duraiswamy Sundaravadivelu, அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பல காலம் சிறப்பாகப் பணியாற்றியவர்.

இவரது கருத்துகள்[தொகு]

  • கவிதைகளையும், மற்றும் சிறந்த இலக்கியங்களையும் மனப்பாடம் செய்யும் பழக்கத்தை நல்ல முறையில். மறுபடியும் பழக்கத்திற்குக் கொண்டு வரலாம். முந்திய காலத்தில் இந்தப் பழக்கம் இருந்து வந்தது. இப்போது மறைந்து வருகிறது. எனவே, அதனை மறுபடியும் கொண்டு வந்தால் ஞாபக சக்திக்கும் ஆக்கம் ஏற்படும்.[1]
  • அரசியல் வாதிகளைவிடக் கல்வி நிபுணர்களே அதிகப்படியான பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். — (1-12-1960)[2]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=நெ._து._சுந்தரவடிவேலு&oldid=36342" இலிருந்து மீள்விக்கப்பட்டது