சுவாமி சாரதானந்தர்
Appearance
சுவாமி சாரதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார்.
இவரது கருத்துகள்
[தொகு]- புதிதாய் ஆரம்பிக்கப்படும் ஒவ்வொரு இயக்கமும், அதன் அடிப்படையான முக்கிய கொள்கைகள் உலகத்திலுள்ள சமூகத்தினர் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்படுவற்கு முன்னல், இரண்டு பெரிய முட்டுக்கட்டைகளைத் தாண்டித்தான் முன் செல்ல வேண்டுமென்ற ஒரு கண்டிப்பான நியதி ஏற்பட்டிருப்பதுபோல் நமக்குத் தோன்றுகிறது. மக்களால் அக்கொள்கைகள் ஒழுங்கற்றவையென நிராகரிக்கப்படுவதும், பின் அவை மிகவும் சிறப்பானவை அல்லவெனக் கருதி கவனம் செலுத்தாது அலட்சியம் செய்யப்படுவதுமான இவ்விரண்டும் மேலே கூறப்பட்ட முட்டுக்கட்டைகளாகும்.
- (1-4-1926) (கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பேளூரில் நடைபெற்ற இராம கிருஷ்ண சங்கத்தின் முதல் மாநாட்டில்)[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.