பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (Pamban Gurudasa Swamigal, அண். 1848-50 - மே 30, 1929) தமிழ்நாட்டில் இராமேசுவரம் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார்.

இவரது கருத்துகள்[தொகு]

  • முகமதியர் தமது நோன்பிலே, பெருந்தீயில் இறங்சிச் செல்கின்றனர். இது தெய்வத் திருவருளா? அல்லது வேறு ஏதேனும் சூழ்ச்சியினலா? என்றால், அருளும் அன்று; சூழ்ச்சியும் அன்று;முகமதியர் மட்டும் அல்லர், இந்துக்களும் திரெளபதை கோயில், முருகக் கடவுள் கோயில் முதலிய இடங்களில் தீயில் இறங்கிச் செல்கின்றனர். தீ அவர்களைச் சுடுவதில்லே. இது தெய்வச் செயல் என்று நீங்கள் எண்ணுதல் வேண்டா. கையால் தீயை எடுக்கலாம்; ஆனல் அதனே வைத்துக் கொண்டிருக்க முடியாது. கை ஒரு மாத்திரை நேரம் அளவு சூட்டைப் பொறுக்கும். காலில் தீயின் வெம்மை சிறிது தாழ்ந்தே சுடுமாதலின், அஃது இரண்டு மாத்திரை குடு பொறுக்கும். தீயில் நடந்து செல்லலாம். தீயின் சாம்பல் காலில் ஒட்டிக் கொண்டால் சுடும். தீயில் சாம்பல் உண்டாகாமல் பாதுகாத்து நடப்பின் சுடாதிருக்கும். — (1878-ஆம் ஆண்டில்)[1]

சான்றுகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: