கொரோனாவைரசு

விக்கிமேற்கோள் இலிருந்து
SARS-CoV-2 without background

கொரோனா தீநுண்மி (பரிவட்ட நச்சுயிரி) அல்லது கொரோனாவைரசு (Coronaviruse) பாலூட்டிகளிலும் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும் ஒரு தீநுண்மி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • கரோனா மனிதர்களிடையே பெரிய அளவில் ஒற்றுமையின்மையையும் நம்பிக்கையின்மையையும் விளைவிக்கும் என்றால், அதுவே வைரசின் மிகப்பெரிய வெற்றி. மனிதர்கள் வேறுபட்டு நின்றால் வைரசுகள் இரட்டிப்பாகும். மாறாக, இந்தத் தொற்று உலக அளவில் நெருங்கிய ஒருங்கிணைப்பை உருவாக்கும் என்றால் அது கோரோனா வைரசுக்கு எதிரான வெற்றி மட்டுமல்ல; எதிர்காலத்தில் நாம் சந்திக்கவிருக்கும் அனைத்து நோய்க்கிருமிகளுக்கும் எதிரான வெற்றி _ யுவால் நோவா ஹராரி, சேப்பியன்ஸ் நூலாசிரியர்[1]
  • கரோனா வைரசு உலகை நிரந்தரமாகவே மாற்றிவிடப்போகிறது. நாம் சமூகத்தோடு எப்படி உறவாட வேண்டும், கடைகளில் பொருட்களை எப்படி வாங்கவேண்டும், ஒருவருக்கொருவர் எப்படி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளவேண்டும், எப்படி பாதுகாப்பாக வெளியே சென்றுவர வேண்டும் எனபதையெல்லாம் 'மறுவடிவமைப்பு' செய்யப்போகிறது. 'நல்லதற்கோ கெட்டதற்கோ' சில மாற்றங்கள் நடக்கதான் போகிறது. -காத்தரின் மாங்கு-வார்டு, அமெரிக்கப் பத்திரிகையாளர்.[2]
  • இரண்டு தசாப்தங்களாக உலகம் அடைந்த வளர்ச்சியை கரோனா வைரஸ் ஒரு சில மாதங்களுக்குள் துடைத்தழித்துவிட்டது. இப்படியாக இருநூறு கோடி மக்களைக் கடுமையான வறுமைக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. பரவுவதில் கரோனா பாரபட்சம் காட்டவில்லை என்றாலும், அதனால் அதிக பாதிபுக்குள்ளாவது கீழ்நிலையில் இருக்கும் சமூகங்கள்தான். -மரியா அபி-ஹபீப் பத்திரிக்கையாளர்[3]

குறிப்புகள்[தொகு]

  1. இந்து தமிழ் 2020 மார்ச் 30 பக்கம் 6
  2. இந்து தமிழ் 2020 ஏப்ரல் 9 பக்கம் 6
  3. இந்து தமிழ் 2020 மே 5 பக்கம் 6
"https://ta.wikiquote.org/w/index.php?title=கொரோனாவைரசு&oldid=19607" இலிருந்து மீள்விக்கப்பட்டது