உள்ளடக்கத்துக்குச் செல்

அணிகலன்

விக்கிமேற்கோள் இலிருந்து

அணிகலன் (About this soundpronunciation (உதவி·தகவல்)) என்பது, அழகுக்காக மனிதர் தமது பல்வேறு உறுப்புக்களில் அணிந்துகொள்ளும் பொருட்கள் ஆகும். இது நகை, ஆபரணம் போன்ற பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு.

மேற்கோள்கள்

[தொகு]
  • அணிமணிகள் எல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாம் - லவேட்டர்[1]
  • கன்னிமாடப் பெண்களுக்கு அணியாவது ஒழுக்கமே தவிர உடையன்று. - ஜஸ்டின்[1]
  • நாம் அனைவரும் ஆதியில் வனத்திலிருந்து வந்தவர்கள் பச்சை குத்திக்கொள்ளல், போருக்காக உடலில் வர்ணம் பூசிக்கொள்ளல் ஆகியவைகளிலுள்ள பழைய ஆசையை நாம் அழிப்பது கஷ்டம் நம் பைகளில் பணம் வந்து சேர்ந்ததும் அது எப்படி நகைகளாக மாறி, நம்மீது தொங்கத் தொடங்குகின்றது. நகைகளால் நம் நடத்தைகள் செம்மைப்படுவதில்லை. - இ. பி. விப்பிள்[1]
  • கூடுதலாக ஆடைகள் அணிதல். செலவு மிகுந்த ஒரு தவறு. அந்த ஆடைகளைக் குறைத்துக் கத்தரித்தால், வெட்டிய துண்டுகள், உடையில்லாமல் தவிப்பவர்களுக்கெல்லாம் உடையாகிவிடும். - பென்[1]
  • வெளிப்பகட்டில் பயனில்லை; அறிவாளிகள் உண்மையான விஷயங்களைக் கொண்டு வாழ்க்கையை வகுத்துக்கொள்வர். - பென்[1]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் -18. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அணிகலன்&oldid=19166" இலிருந்து மீள்விக்கப்பட்டது