உள்ளடக்கத்துக்குச் செல்

ப. சிதம்பரம்

விக்கிமேற்கோள் இலிருந்து

ப. சிதம்பரம்- பழனியப்பன் சிதம்பரம் (ஆங்கிலம்:P. Chidambaram) தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் , இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சரும் ஆவார். இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், இருமுறைமத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இருமுறைமத்திய நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1984 முதல் மக்களவையின் உறுப்பினராகத் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழில் முறையில் வழக்கறிஞரான இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • ஐஸ்கிரீம் வாங்க 20 ரூபாய், தண்ணீர் பாட்டில் வாங்க 15 ரூபாய் செலவிடத் தயாராக இருக்கும் மக்கள் அரிசி மற்றும் கோதுமைக்கு ஒரு ரூபாய் அதிகமாக கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
  • எந்த துறையையும் சட்ட அறிவில்லாமல் நடத்த முடியாது. சட்ட அறிவு இல்லாமல் பொறுப்புகளை நிர்வகிக்க முடியாது. சட்டம் படித்தால் அனைத்து துறைகளுக்கும் செல்லலாம். முதல் பெண் வழக்கறிஞர் 'மகாபாரதம் பாஞ்சாலி' தான். அதற்கு அடுத்த வழக்கறிஞர் கண்ணகி. சட்டம் படிக்கும் பெண்கள் பாஞ்சாலி, கண்ணகி போல் வர வேண்டும் [1]
  • என்னை பார்த்து பயப்பட நான் என்ன சிங்கமா புலியா? நான் ஒரு மனிதன். காங்கிரஸ் கட்சியை பிரதிபலிக்கும் மனிதன்[2]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

[தொகு]
"https://ta.wikiquote.org/w/index.php?title=ப._சிதம்பரம்&oldid=38159" இலிருந்து மீள்விக்கப்பட்டது