உள்ளடக்கத்துக்குச் செல்

பகற்கனவு

விக்கிமேற்கோள் இலிருந்து

பகற்கனவு (Daydream) என்பது சுற்றுச் சூழல் மற்றும் உண்மை நிலையிலிருந்து தெளிவற்ற தொடர்பு, மிகுபுனைவு தன்மையுடன் கூடிய நோக்கு மூலம் குறுகிய கால தொடர்பற்றிருக்கும் நிலையாகும். இது பொதுவாக மகிழ்ச்சி, இனிமையான சிந்தனைகள், நம்பிக்கைகள், கற்பனையாக ஒரு விடயத்தைக் கடத்தல் போன்றவற்றை விழித்திருக்கும்போதே அனுபவிப்பதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • நீ ஆகாயத்தில் கோட்டைகள் கட்டியிருந்தால் உன் வேலை வீணாய்ப் போகாது. அவை இருக்க வேண்டிய இடம் அது தான். இப்பொழுது அவைகளின் அடியில் அடிப்படைகளை அமைத்துவிடு. - தோரோ[1]
  • நாம் பனிக்கட்டிமீது கட்டடம் அமைக்கிறோம். கடலின் அலைகள்மீது எழுதி வைக்கிறோம். அலைகள் உறுமிக் கொண்டு பாய்ந்து செல்லுகின்றன. பனிக்கட்டி உருகி, நாம் கட்டிய மாளிகை. நம் சிந்தனைகளைப் போல். மறைந்து விடுகின்றது. - ஹெர்டர்[1]
  • த மேகங்களையே பார்த்துக்கொண்டு நாம் கட்டடத்தை மேலும் மேலும் உயரமாய்க் கட்டிக்கொண்டே போகிறோம். கீழேயுள்ள மாபெரும் தூண்கள் போதிய அடிப்பை யில்லாமல் ஆடிக்கொண்டிருப்பதைப்பற்றி நாம் சிந்திப்பதேயில்லை. - ஷில்லர்[1]
  • இளமைதான். அல்நாஷரைப் போல, இன்பமயமான கனவுகள் காண ஏற்ற காலம். -தாக்கரே[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 82-83. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பகற்கனவு&oldid=19770" இலிருந்து மீள்விக்கப்பட்டது