ஆனால்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஆனால் என்ற சொல் குறித்த மேற்கோள்கள்.

  • ஒரு மனிதனை முதலில் புகழ்ந்து பேசிவிட்டு, பின்னர் 'ஆனால்' என்று கூறத் தொடங்கினால், அந்தப் புகழ்ச்சியைப் போல இழிவானதும் வெறுக்கத்தக்கதும் வேறில்லை. - பீச்செர்[1]
  • ஆனால் என்னும் வெறுக்கத்தக்க சொல் வந்துவிட்டால் முன்னால் சொன்னவையெல்லாம் வீணாகிவிடும். இல்லை என்று மறுப்பதோ, அவமானப்படுத்துவதோ மேலாகும் - டேனியல்[1]
  • ஆனால் என்ற சொல் இரக்கத்தின் துடிப்புகளை நிறுத்திவிடும். அன்பு ததும்பும் சிந்தனைகளை அடைத்து விடும். சகோதரப்பான்மையுடன் செய்யும் வேலைகளை அடியோடு நிறுத்திவிடும்; ஆனால். ஆனால் என்ற சொற்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தால், எவனும் தன் அண்டை வீட்டுக்காரனைக்கூடத் தன்னைப்போல எண்ணி, நேசிக்கமாட்டான். புல்லர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 95-96. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆனால்&oldid=19964" இலிருந்து மீள்விக்கப்பட்டது