உள்ளடக்கத்துக்குச் செல்

வீடு

விக்கிமேற்கோள் இலிருந்து

பொதுவான பயன்பாட்டில், வீடு அல்லது இல்லம் என்பது, மனிதர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்படும் கட்டிடங்கள் அல்லது அமைப்புக்களைக் குறிக்கும். இங்கே வாழ்வது என்பது, உணவு சமைத்தல், சாப்பிடுதல், இளைப்பாறுதல், தூங்குதல், விருந்தினர்களை வரவேற்றல், வருமானந்தரும் செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை உள்ளடக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • அரசனாயினும் குடியானவனாயினும், தன் வீட்டில் அமைதியைக் காண்பவனே தலைசிறந்த மகிழ்ச்சியுள்ளவன். - கதே [1]
  • வீடுதான் அன்பு, மகிழ்ச்சி, அமைதி. செழிப்பு ஆகியவற்றின் இருப்பிடம் அங்கேதான் தாங்கள் உதவி புரிந்தும், உதவிகளைப் பெற்றும். சிறந்த நண்பர்களும். நெருங்கிய உறவினர்களும் கூடி இன்புறுகின்றனர். . தாம்ஸன் [1]
  • மற்ற ஸ்தாபனங்களுக்கெல்லாம் வளர்ப்புப் பண்ணை வீடுதான். - சேப்பின்[1]
  • நம்முடைய குற்றவாளிகளுள் நூற்றுக்கு எண்பது பேர் அனுதாபமில்லாத வீடுகளிலிருந்து வந்தவர்கள். - ஹான்ஸ் கிறின்டின் ஆண்டர்ஸஸ் [1]
  • எவ்வளவு சிறிதாயிருந்தாலும், வீட்டுக்கு நிகரானது வேறில்லை. - பேய்ன்[1]
  • வீடுதான் ஓர் இராஜ்யத்தை அமைக்கின்றது. -ஜோஸப் குக்[1]

பழமொழிகள்

[தொகு]
  • நூறு பேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால், ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு ஸ்திரீ வேண்டும். -சீனப் பழமொழி[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 107. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வீடு&oldid=20120" இலிருந்து மீள்விக்கப்பட்டது