உணர்ச்சித் தூண்டுதல்

விக்கிமேற்கோள் இலிருந்து

உணர்ச்சித் தூண்டுதல் குறித்த மேற்கோள்கள்

  • பொதுவாக மனிதர் அனைவரும் உணர்ச்சித் தூண்டுதலால் உந்தப்படுகின்றனரே அன்றித் தத்துவத்தை ஆராய்ந்து நடப்பதில்லை. எனவே, நாம் கருதுவது போல அவர்கள் மிகவும் நல்லவர்களாகவோ மிகவும் தீயவர்களாகவோ இருப்பதில்லை. - ஹேர்[1]
  • நம்முடைய முதல் உணர்ச்சிகள் நல்லவை. தாராளப் போக்குள்ளவை: வீரம் நிறைந்தவை. பின்னால் செய்யும் சிந்தனை அவைகளைப் பலவீனமாக்கி வதைத்துவிடுகின்றது. -எல். ஏ. மார்ட்டின்[1]
  • உங்கள் உணர்ச்சிகளின்படி நடவுங்கள், ஆனால், அவைகளை நல்ல வழிகளில் செலுத்தும்படி இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். - இ. டென்னென்ட்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 120. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உணர்ச்சித்_தூண்டுதல்&oldid=20374" இலிருந்து மீள்விக்கப்பட்டது