ஒப்புக்கொள்ளுதல்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஒப்புக்கொள்ளல் குறித்த மேற்கோள்கள்

  • தீவினைகளை ஒப்புக்கொள்ளலே நல்ல வேலைகளுக்குத் தொடக்கமாகும். . - அகஸ்டின்[1]
  • எந்த மனிதனும் தன் தீமைகளை முன் ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில், அவன் இன்னும் அவைகளில் திளைத்துக்கொண்டிருக்கிறான். விழித்தெழுபவன்தான் தன் கனவைப்பற்றிப் பேச முடியும். - ஸெனீகா[1]
  • ஒருவன் தான் தவறு செய்ததை ஒப்புக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு பெற்றிருக்கிறான் என்பதே. - போப் [1]
  • நம்முடைய தவறான செயல்களை ஒப்புக்கொள்ளத் தைரியம் அவசியமில்லை. பரிகசிக்கத் தகுந்த மடமையான காரியங்களுக்கே அது அவசியம். - ரூஸோ[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 140-141. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஒப்புக்கொள்ளுதல்&oldid=20660" இலிருந்து மீள்விக்கப்பட்டது