சோகம்

விக்கிமேற்கோள் இலிருந்து

சோகம் என்பது மகிழ்ச்சியற்ற, துயரம் அல்லது துக்கம் கொண்ட ஒரு அனுபவமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • வானுலகால் சாந்தப்படுத்த முடியாத சோகம் எதுவும் பூமிக்கு ஏற்படுவதில்லை. - மூர்[1]
  • அதிக வேலையாக அலைபவர்களுக்குக் கண்ணீர் விட நேரமில்லை. -பைரன்[1]
  • சோகம் தோன்றினால், வார்த்தைகளால் வெளியிட வேண்டும்: பேசாமல் அடங்கியுள்ள கோபம் முறுகிக் கிடக்கும் இதயத்தை உடையச் செய்துவிடும். - ஷேக்ஸ்பியர்[1]
  • ஒரு சோகம் (தனியே வராமல்) ஒரு வாரிசையும் கூட அழைத்துக் கொண்டு வரும். அதற்குப் பின்னால் வாரிசு தலையெடுக்கும். - ஷேக்ஸ்பியர்[1]
  • வாழ்க்கையாகிய மணலில் சோகம் பலமாக மிதித்து நடப்பதால், அதன் தடங்கள் பதிந்துவிடுகின்றன. அவைகளைக் காலத்தால் அழிக்க முடிவதில்லை. - எச்நில்[1]
  • சோகம் எவ்வளவு அதிகமோ அந்த அளவுக்கு நாவு பேச முடியாது. - டால்மாட்[1]
  • சோகத்தோடு அனுபவம் வருகின்றது. நம் நம்பிக்கைகளில் எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று கற்பிக்கும் கொடுகையான அறிவும் ஏற்படுகின்றது. - இ. கபோரிடா[1]
  • இன்பம் அனுபவித்த பல ஆண்டுகள் சந்தடியில்லாமல் அகன்று விடுகின்றன. ஆனால், சோகம் ஒவ்வொரு நிமிடமாக எண்ணிக் கொண்டு இருக்கின்றது. - ஹவார்டு[1]
  • துக்கம் மனிதர்களுக்காக ஏற்பட்டது. விலங்குகளுக்காக அன்று: ஆனால், மனிதர் அதிகமாய்த் துக்கம் கொண்டாடினால், அவர்கள் விலங்குகளுக்கு மேலல்லர். - செர்வான்டிஸ்[1]
  • அளவுக்கதிகமான சோகம், அளவுக்கதிகமான சிரிப்பைப் போல் மடமையாகும்; ஆனால், துக்கமே கொண்டாடாமல் இருப்பது உணர்வில்லாமை ஆகும். -ஸெனீகா[1]
  • கண்ணை மறைக்கும் கண்ணீரைக் காலமும் பொறுமையும் காயவைக்கின்றன. - பிரெட்ஹார்ட்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 200-201. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சோகம்&oldid=35314" இலிருந்து மீள்விக்கப்பட்டது