நாட்டுப்புறம்
Appearance
நாட்டுப்புறம் (rural) என்பது மிகக் குறைந்த குடியடர்த்தி கொண்ட, நகரப் பகுதிகளிலிருந்து வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட பகுதிகளைக் குறிக்கும்.
- நாட்டுப்புறத்து வீடுகளும். தோட்டங்களும் துரவுகளும் கழனிகளும், ஓடைகளும், காவுகளும் கிராமப்புறத்து விளையாட்டுகளும், எல்லாம் ஒழுக்கம் நிறைந்தவை. நகரங்களிலோ, பல்கலைக் கழகங்களிலோ அந்தப் பண்பைக் காண்பதரிது. - ஏ. பி. ஆல்காட்[1]
- நாட்டுப்புறத்தில் வசிக்கும் மனிதர்கள், ஒழுக்கத்தைக் கற்பதுடன் சுதந்தர ஆசையையும் பெறுகின்றனர். - மினாண்டர்[1]
- நாட்டுப்புற வாழ்க்கை உடலுக்கு ஆரோக்கியமாயிருப்பதுடன் உள்ளத்திற்கும் உரமளிப்பதாகும். - ரூஃபினி[1]
- கடவுள். நாட்டுப்புறத்தை உண்டாக்கினார் மனிதன், நகரத்தை உண்டாக்கினான். - கௌப்பர்[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 235. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.