நிறைவுடைமை

விக்கிமேற்கோள் இலிருந்து

நிறைவுடைமை என்பது குறித்த மேற்கோள்கள்.

  • நிறைவுடைமை படிப்படியாக நீண்ட காலத்தில் அமைவது. - வால்டேர்[1]
  • நிறைவு அசாதாரணமான விஷயங்களைச் செய்வதில் இல்லை, சாதாரண விஷயங்களை, அசாதாரண முறையில், நன்றாகச் செயவதில் இருக்கின்றது. எதையும் அலட்சியம் செய்ய வேண்டாம் இறைவனுக்காக எந்தச் சிறு செயலையும் செய்து முடிக்கலாம். - ஏ. ஆர்னால்ட்[1]
  • ஒவ்வொரு விஷயத்தையும் நிறைவுடையதாகச் செய்ய முயற்சி செய்யவும், பெரும்பாலான விஷயங்களில் நிறைவடைவது கஷ்டமே ஆயினும் அதைக் குறிப்பாக வைத்துக்கொண்டு முயற்சி செய்பவர்கள் ஏறத்தாழ அதை எட்டிவிடுவார்கள்: மற்றவர்கள் சோம்பலினாலும், அயர்வினாலும். எடுத்துக் கொண்ட விஷயங்களை நிறைவேற்றுவது கஷ்டமென்று இடையில் கைவிட்டுவிடுவார்கள். - செஸ்டர்ஃபீல்டு[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 238. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நிறைவுடைமை&oldid=21883" இலிருந்து மீள்விக்கப்பட்டது