பரோபகாரம்

விக்கிமேற்கோள் இலிருந்து

பரோபகாரம் என்பது பர + உபகாரம் என்ற சொற்களின் சேர்கையாகும். பிறருக்கு செய்யும் உதவி பரோபகாரம் எனப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  • அவன் தனக்காக அல்ல, உலகுக்காக வாழ்கிறான். லூகான்[1]
  • வெளிப்படையாகத் தெரியும்படியான தருமங்களில் பொன்னைப் புதைத்து வைக்காமல், மானிட இதயத்தில் தன் வைத்திய நிலையத்தை அமைப்பதே உண்மையான பரோபகாரம். -ஹார்வி[1]
  • தானத்தைப் போல் பரோபகாரமும் ஒருவருடைய வீட்டிலிருந்தே ஆரம்பமாக வேண்டும். இதை மையப் புள்ளியாக வைத்துக் கொண்டு, நம்முடைய ஆதரவும் அன்பும். விரிவடைந்து கொண்டேயிருக்கும் வட்டத்தின் மேல் வட்டமாகப் பெருகி வரவேண்டும். -லாம்ப்[1]
  • மற்றவர்களுடைய நன்மைக்காகத் தன்னுடைய ஓய்வு, தன் உதிரம், தன் செல்வம் ஆகியவற்றில் ஒரு பகுதிகூட அளிக்க முடியாதவன் இரக்கமற்ற இழிமகனாவான். -ஜோ. அன்னா பெய்லி[1]

குறிப்பபுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 258. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பரோபகாரம்&oldid=29573" இலிருந்து மீள்விக்கப்பட்டது