உள்ளடக்கத்துக்குச் செல்

பெருந்தீனி

விக்கிமேற்கோள் இலிருந்து

பெருந்தீனி (Gluttony) என்பது தேவைக்கும் அதிகமாக உண்ணுதல் ஆகும். இது குறித்த மேற்கோள்கள்

  • உண்பதைத் தவிர வேறு இன்பமேயில்லாதவர்கள் தாங்கள் உயிர் வாழ்வதன் காரணம், அது ஒன்றுதான் என்று கூறலாம். - ஜூவினல்[1]
  • சில மனிதர்கள் விருந்துண்ணவே பிறந்தவர்கள். போராடுவதற்காக அன்று. போர்க்களத்திலே கூட ஊக்கமில்லாத அவர்கள் உள்ளங்களில் சாப்பாட்டைப்பற்றியே நினைவிருக்கும்.[1]
  • சமையலறைதான் அவர்களுடைய ஆலயம் சமையற்காரனே அவர்களுடைய பூசாரி, உணவுண்ணும் மேசையே அவர்கள் பலி பீடம் வயிறே அவர்களுடைய கடவுள். - பக்[1]
  • பெருந்தீனிதான் நம் குறைபாடுகளுக்கெல்லாம் காரணம் நம் பிணிகளுக்கெல்லாம் அடிப்படை - பர்ட்டன்[1]
  • வயிற்றுக்கு அடிமையாயுள்ளவன் கடவுளைத் தொழுதல் அரிது. - ஸா அதி[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 282. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பெருந்தீனி&oldid=34979" இலிருந்து மீள்விக்கப்பட்டது