பெருமை

விக்கிமேற்கோள் இலிருந்து

பெருமை (Pride) என்பது ஒருவரின் சுய பார்வை. பெருமை பெரும்பாலும் ஒருவரின் தேசம் (தேசிய பெருமை), இனம் (இனப் பெருமை) அல்லது தோற்றம் (பகட்டு) பற்றிய உயர்ந்த கருத்தாக வெளிப்படுகிறது. பெருமை என்பது பெரும்பாலான தத்துவங்கள் மற்றும் முக்கிய உலக சமயங்களால் எதிர்மறையான பண்பாகக் கருதப்படுகிறது, ஆனால் சில தத்துவங்கள் இதை நேர்மறையாகக் கருதுகின்றன. பெருமைக்கு நேர்மாறானது பணிவு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • பெருமை. வலிமையாயிருப்பதில் இல்லை. வலிமையைச் சரியாகப் பயன்படுத்துவதில் இருக்கின்றது.[1]
  • பெருமை என்பது ஒரு பெரிய உள்ளத்தின் பயனாகும். அதன் இலட்சியமன்று. - வா. ஆல்ஸ்டன்[1]
  • தன் வாழ்க்கை தன் சமூகத்திற்கு உரியதென்றும் தனக்கு இறைவன் அருளியவையெல்லாம் மானிட சமூகத்திற்காக அருளியவை என்றும் ஓரளவு உணராத மனிதன் எவனும் உண்மையான பெருமையை அடைந்ததில்லை. - ஃபிலிப்ஸ் புருக்ஸ்[1]
  • சிலர், பிறப்பிலேயே பெருமையுடன் வருகின்றனர். சிலர், பெருமையை அடைகின்றனர். சிலர்மீது பெருமை திணிக்கப் பெறுகின்றது. - ஷேக்ஸ்பியர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 282-283. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பெருமை&oldid=34985" இலிருந்து மீள்விக்கப்பட்டது