உள்ளடக்கத்துக்குச் செல்

பொழுதுபோக்கு

விக்கிமேற்கோள் இலிருந்து

மகிழ்கலை அல்லது பொழுதுபோக்கு என்பது மகிழ்ச்சியை தருவிப்பதை நோக்காக கொண்ட கலைகளை மகிழ்கலைகள் எனலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  • மனிதர்கள் எப்பொழுதும் வேலை செய்துகொண்டேயிருக்க முடியாது. அவர்களுக்கும் பொழுது போக்க வசதி வேண்டும். நல்ல பொழுதுபோக்குகள் கிடைக்காவிட்டால், அவர்கள் தீமையானவைகளில் ஈடுபட நேர்ந்துவிடும். - ஓ. டி. யூயி[1]
  • பொழுதுபோக்கு என்பது சோம்பியிருத்தலன்று. உடலின் எந்தப் பகுதி வேலையால் களைத்துப் போயுள்ளதோ, அதை வேறு வேலையில் திருப்பிக் களைப்பைத் தீர்ப்பதாகும்.[1]
  • பொழுதுபோக்கும் விளையாட்டுகள் ஒழுக்கத்திற்கு உகந்தவை: மெல்லிய காற்று. நெருப்புக்கு உதவுவது போன்றவை அவை ஆனால், பலமான காற்று நெருப்பை அணைத்துவிடும். - தாமஸ்[1]
  • அரிவாளுக்குச் சாணை பிடிப்பது போன்றது மனத்திற்குப் பொழுதுபோக்கு அது இல்லாவிட்டால் மனம் ஊக்கம் குன்றி மழுங்கிப் போகும். - பிஷப் ஹால்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 289. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பொழுதுபோக்கு&oldid=35304" இலிருந்து மீள்விக்கப்பட்டது