இத்தாலி பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் இத்தாலி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • அன்பில்லாத கணவன் பொறாமையுள்ள கணவனைவிட மேலானவன்.
  • ஆறடி நிலம் அனைவரையும் சமானமாக்குகின்றது.
  • இறந்த மனைவியின் துக்கம் வாயிற் கதவோடு சரி.
  • இறந்தவன் ஒருவனைத் தூக்க நாலு பேர் வேண்டும்.
  • இன்று விருந்து, நாளை உபவாசம்.
  • ஈக்கும் இருமலுண்டு.
  • ஒரு தொழிலும் தெரியாதவன் வைத்தியனாகிறான்.
  • ஒரு மகள் வேண்டுமென்று தேர்ந்தெடுப்பதுபோல், மனைவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு, அவன் ஒரு வீடாவது கட்டியிருக்க வேண்டும், ஒரு மகனையாவது பெற்றிருக்க வேண்டும், அல்லது ஒரு நூலாவது எழுதியிருக்கவேண்டும்.
  • ஒரே பெண்ணையோ, ஒரே பேருந்தையோ தொடர்ந்து ஓட வேண்டாம், பின்னால் வேறு கிடைக்கும்.
  • ஒவ்வொரு ஜாடிக்கும் ஒரு மூடி கிடைக்கும். (திருமணம்.)
  • காதல் கொண்டவர்களின் கோபம் சிலந்தி வலை போன்றது.
  • குஞ்சுகளே வாத்துக்களைப் புல்வெளிக்கு அழைத்துச் செல்கின்றன.
  • குழந்தைகள் இல்லாதவனுக்கு அன்பு புரியாது.
  • சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார்.
  • சூரியனையே பார்க்க முடியாதவன் குருடன்தான்.
  • செல்வமில்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் அதுவே பாதி நோயாகும்.
  • தூங்கும் பொழுது சிரிக்கும் குழந்தை தேவர்களுடன் விளையாடுகின்றது.
  • நமக்குக் காசு நிறைய இருந்தால், அத்தை பிள்ளைகளும், அம்மான் பிள்ளைகளும் கிடைப்பார்கள்.
  • நல்ல மரணம் வாழ்வு முழுவதும் பெருமையளிப்பது.
  • நல்லதோ, கெட்டதோ நாம் அனைவரும் வாழத்தான் வேண்டும்.
  • நீ கடலுடன் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் ஓர் ஆறு.
  • நோயாளி எதுவும் பேசலாம்.
  • மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு; ஆனால் நீ தனித்திரு.
  • மரணம் ஆண்டிக்கும் உண்டு, போப்பாண்டவருக்கும் உண்டு.
  • வீட்டுக்குத் தேவையானவை நான்கு: தானியம், சேவல், பூனை, மனைவி.
  • வெந்நீரும், 'எனிமா'வும் கொண்டே எல்லாப் பிணிகளையும் குணமாக்கலாம்.
    [குடலில் நீரேற்றும் குழாய் 'எனிமா.']
  • வைத்தியரிடத்திலும் வக்கீலிடத்திலும் உண்மையை மறைக்காதே.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இத்தாலி_பழமொழிகள்&oldid=38035" இலிருந்து மீள்விக்கப்பட்டது