உள்ளடக்கத்துக்குச் செல்

அயர்லந்து பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் அயர்லந்து பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • ஆகக்கூடிய வயதுடையவனும் இறந்துதான் போனான்.
  • 'ஆஸ்துமா' வந்தவர் நெடுநாள் வாழ்வர்.
  • உயிருள்ளவரை பெண்களுக்கு வர்ணங்களில் ஆசையிருக்கும்.
  • ஒவ்வொரு பிணியும் ஒரு வைத்தியன்.
  • கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக்கொண்டால், மேலும் குளிருக்கு அடக்கம்தான்.
    [உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது]
  • காதலுக்கு மருந்தில்லை, மருத்துவனுமில்லை.
  • குழந்தையில்லாதவன் சும்மா குந்தியிருப்பது வீண்.
  • நீ உன் மனைவியை மணந்து கொள்ளும் போதே உன் குழந்தைகளையும் மணந்து கொண்டு விட்டாய்.

(விவாகமானால், குழந்தைகளின் பாரத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.)

  • நீடித்த நோய்களுக்குப் பொறுமைதான் மருந்து.
  • பெண்பிள்ளை சயித்தானை வென்று விடுவாள்.
  • மரணமே உலகின் யசமானன்.
  • முகத்தில் ஒரு பரு வந்து விட்டால் உடலுக்குள் சயித்தான் புகுந்த மாதிரி.
  • முதல் ஆண்டு முத்தமிடும் ஆண்டு, இரண்டாம் ஆண்டு முட்டிப் பாயும் ஆண்டு.
  • வரட்சியான இருமல் வந்து விட்டால், எல்லா நோய்களும் தீர்ந்து விடும்.
    [மரணம்]
  • வளர்ப்பதற்குச் சொந்தக் குழந்தை யில்லாதவன் அதிருஷ்டமில்லாதவன்.
  • வாலிபத்திற்கு அடிக்கடி தோல் உரிந்து, புதுத் தோல் உண்டாகும்.
  • வாலிபத்தைப் பாராட்டிப் பேசினால், அது மேன்மையடையும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அயர்லந்து_பழமொழிகள்&oldid=38027" இலிருந்து மீள்விக்கப்பட்டது