ஹங்கேரிய பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் ஹங்கேரிய மொழி பழமொழிகள் தொகுக்கபட்டடுள்ளன.

  • அதிக வயதாகியும் கன்னியா யிருப்பவள் அஞ்சலில் சேராத கடிதம் போன்றவள்.
  • ஆந்தையும் தன் மகனை இராஜாளி என்றே கருதுகின்து.
  • ஆரோக்கியத்தின் அருமையை நோயில்தான் அறியலாம்.
  • ஒற்றைக் குழந்தை கடவுளின் தண்டனை.
  • எல்லோரும் ஆரோக்கியமா யிருந்தால், வைத்தியர் பாடு திண்டாட்டம்.
  • கடுமையான நோய்க்குக் கடவுளே வைத்தியர்.
  • காதல் மடமை இரண்டுக்கும் பெயரில் தான் வேற்றுமை.
  • கனவிலும் காதலிலும் இயலாத காரியமே இல்லை.
  • தண்டனை யடையாமல் கொல்லக்கூடியவர் வைத்தியர் ஒருவரே.
  • நாய்க்கடிக்கு நாயின் ரோமம் மருந்தாகும்.
  • முதலாவது மனைவி இறைவனிடமிருந்து வருகிறாள்; இரண்டாவது மனைவி மனிதரிடமிருந்து வாருகிறள் : மூன்றாவது மனைவி சயித்தானிடமிருந்து வருகிறாள்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹங்கேரிய_பழமொழிகள்&oldid=38000" இலிருந்து மீள்விக்கப்பட்டது