உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழரசன்

விக்கிமேற்கோள் இலிருந்து

தமிழரசன் தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல், மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். கோவையில் வேதிபொறியியல் படித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்குச் சரியான தீர்வு தமீழீழ நாடு பெறுவதே!
  • மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை உலகிற்கே அறிமுகப்படுத்தியவர்கள் ஏகாதிபத்தியங்களல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரக்கணக்கான சாதிகளாக்கி ஆள்வதெப்படி என்பதை அறிமுகப்படுத்தியவர்கள் நம்மவர்களே
  • தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா! தாழ்த்தப்பட்டவர்களின் சிறைக்கூடங்களே சேரிகள்!
  • தனி மனித உரிமைகளைப் பரம்பரை பரம்பரையாக மறுக்கும் பரம்பரை வேலைப்பங்கீடே, சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பே சாதி
  • சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் என்ற மீன்சுருட்டி மாநாட்டின் அறிக்கையின் சிறப்பு மிகு பதிவுகள்
  • உழைக்கும் மக்களைச் சாதி ஒழிப்பின் அடிப்படையில் ஒன்றுபடுத்துவோம்.
  • வறட்டுவாதிகளின் சீர்திருத்தவாதிகளின் தவறான அணுகுமுறைகளை முறியடித்து சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=தமிழரசன்&oldid=6375" இலிருந்து மீள்விக்கப்பட்டது