உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலந்து பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் ஆலந்து பழமொழிகள்* தொகுக்கப்பட்டுள்ளன.

  • உருளைக் கிழங்கையும், காதலனையுமே ஒரு பெண் தானாகத் தேர்ந்தெடுக்கிறாள்.
  • ஒரு முறை விவாகம் கடமை; இருமுறை தவறு; மும்முறை பைத்தியம்.
  • காதற் கடிதங்களை எழுதுவோர் மெலிகின்றனர், கொண்டு கொடுப்பவர்கள் கொழுக்கிறார்கள். [காதலரின் தூதர்களுக்கு இருபக்கங்களிலும் வெகுமதிகள் நிறையக் கிடைக்கும்.]
  • பெண்களைப் பெற்றவன் எப்பொழுதுமே மேய்க்க வேண்டிய ஆயன்.
  • மற்றொருவர் மாளிகையில் விருந்து நன்றாகத்தான் இருக்கும்.
  • மனிதனைப் போல நடந்து கொள்பவனே மனிதன்.
  • வயிரம் போன்ற மகள் மனைவியாகும் போது கண்ணாடியாக மாறுகிறாள்.
  • வீட்டை விட்டு வெகு தூரத்திலிருப்பவன் அபாயத்திற்கு அருகிலிருக்கிறான்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆலந்து_பழமொழிகள்&oldid=37806" இலிருந்து மீள்விக்கப்பட்டது