துருக்கிய பழமொழிகள்
Appearance
இப்பகத்தில் துருக்கிய பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- அவர்கள் சகோதரர்களானாலும், அவர்களுடைய பைகள் சகோதரிகளில்லை.
- ஆரோக்கியமுள்ளவனுக்குத் தினசரி திருமணம்தான்.
- இளைஞன் வேலைக்கு வருகிறான், கிழவன் உணவுக்கு. வருகிறான்.
- உடல் நலமுள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்துதான்.
- கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை எடு.
- குருடர்களின் நடுவில் நீங்களும் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
- குழந்தையை அடித்து வளர்க்காதவன், பின்னால் தன் மார்பிலே அடித்துக் கொள்ள நேரும்.
- தகப்பனாவதில் சிரமம் ஒன்றுமில்லை.
- தன் வீட்டில் அமைதி யில்லாதவன் பூலோக நரகில் இருக்கிறான்.
- தாய் வெங்காயம், தந்தை உள்ளிப்பூடு, அவன் மட்டும் ரோஜா அத்தர்!
- நல்ல திராட்சை மதுவைப்போல், பெண்ணும் இனிமையானவிஷம்.
- நீதிபதி, வைத்தியர் இருவரிடமிருந்தும் இறைவன் என்னைக் காப்பானாக.
- பத்து மனிதரில் ஒன்பது பேர் பெண்கள்.
(பெரும்பாலோர் ஆண்மையில்லாதவர்கள்.) - விதவையின் வீட்டில் கொழுத்த சுண்டெலி இராது.