உள்ளடக்கத்துக்குச் செல்

இசுலாம்

விக்கிமேற்கோள் இலிருந்து

இஸ்லாம் பற்றிய அறிஞர்களின் கூற்றுக்கள்

[தொகு]
இஸ்லாத்தின் எழுச்சி மனிதகுல வரலாற்றில் மிக வியக்கத்தக்க நிகழ்ச்சியாக விளங்குகிறது. மிகவும் பின் தங்கிய - அவல நிலையிலிருந்த ஒரு நாட்டைச்சேர்ந்த மக்களிடமிருந்து புறப்பட்ட இந்த எழுச்சி ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே உலகின் பாதி நிலபரப்பிற்கும் அதிகமாகப் பரவிவிட்டது.

எந்த அளவு நுணுக்கமாக இதன் வளர்ச்சியை நாம் ஆராய்கிறோமோ அந்த அளவுக்கு அசாதாரணமாய் அது நமக்கு தோன்றுகிறது. இதர பெரும் மதங்களின் நிலை என்ன? அவை மிக மெதுவாகவே பரவின. அதற்கும் கடும் போராட்டம் தேவைப்பட்டது. இறுதியில் வலிமை வாய்ந்த மன்னர்களின் துணை கொண்டே அவை வெற்றி பெற்றன. கான்ஸ்டான்டைன் துணை கொண்டுதான் கிறிஸ்தவ மதம் தழைத்தது. அசோகரின் துணை புத்த மதம் மேலோங்கியது.சைரசுக்குப் பிறகுதான் ஜெராஸ்ட்ரியனிசம் பெருகியது. ஒவ்வொருவரும் தாம் தேர்ந்தெடுத் துக்கொண்ட மத ஈடுபாட்டுக்காக ஆட்சியதிகாரத்தை அளித்தனர். ஆனால் இஸ்லாத்தின் நிலை அவ்வாறல்ல. வரலாற்றில் இதற்க்கு முன் எந்த சிறப்பும் பெற்றிராத நாடோடிகளாய் பாலைவனங்களில் சிதறி வாழ்ந்த மக்களிடையே அது தோன்றியது.மிகக் குறைவான ஆள்பலத்தை கொண்டிருந்த போதிலும் வலிமை மிகுந்த உலகாயத சக்திகளின் எதிர்ப்புகள் இருந்த்த போதிலும் அது மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கியது. வியக்கத்தக்க முறையில் அது வெற்றிகளை நிலை நாட்டியது. இரண்டு தலைமுறைக்குள்ளாகவே மத்திய ஆசிய பாலைவனத்திலிருந்து ஆபிரிக்க பாலைவனம் வரையிலும் , இமயத்திலிருந்து பயர்நீஸ் வரையிலும் அது பரவிவிட்டது.

-

ஏ எம் எல் ஸ்டோர்டட் -[A.M.L.Stoddard,Islam-The Religion of all Prophets, Begum Bawani Waqf, Karacci. Pakistan P.56]

நான் முஹமதின் சமயத்தை மிக உயர்ந்த நிலையில் மதிக்கிறேன். ஏனெனில் இஸ்லாத்தில் வியக்கதக்க ஆற்றல்கள் இருக்கின்றன. கால மாற்றங்களை தன்னுள் இணைத்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ள, மேலும் ஒவ்வொரு யுகத்தின் மக்களையும் ஈர்க்கும் தன்மையை கொண்டுள்ள ஒரே மார்க்கம் இது ஒன்றுதான் என எனக்குத்தோன்றுகிறது. நான் இந்த அதிசய மனிதர் பற்றி படித்திருக்கிறேன் இவர் கிருஸ்துவுக்கு விரோதமானவரல்லர் என்பதே எனது கருத்து. முஹம்மதை மனிதகுல மீட்பாளர் என்றே கண்டிப்பாக அழைக்க வேண்டும். அவரைப்போன்ற மனிதர்கள் நவீன உலகின் சர்வாதிகாரியாக அமருவாரேயானால் இன்று தேவைப்படும் அமைதி மற்றும் மகிழ்வை அளித்திடும் வகையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் வெற்றி பெறுவார். இன்றைய ஐரோப்பா இதனை ஒப்புக்கொள்ள துவங்கியிருப்பதை போன்றே நாளைய ஐரோப்பாவும் முகம்மதின் மார்கத்தை ஏற்றுக்கொள்ளும் என முன்னறிவிப்புச் செய்கிறேன்.

-

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா -[The Genuine Islaam, Vol.1, No.81936.]

இன்றைக்கு உலகில் செயல்படும் ஒரே ஜனநாயக நெறி என்றே இஸ்லாத்தை நானும் மற்ற சிந்தனையாளர்களும் கருதுகிறோம்.

எனத் தொடரும் அவரது பேச்சில்

இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையை போன்று வேறேந்த மதமும் - அவற்றின் மத கருத்தோட்டம் எதுவாயினும் சரியே கடைபிடிக்கவில்லை தென் ஆபிரிக்காவில் போயர் இன மக்கள் பிரச்சனை , அவுஸ்த்ரேலியா அல்லது தென் அமெரிக்க நாடுகள் அல்லது இங்கிலாந்தின் பல்வேறு தரப்பட்ட இனமக்களின் பிரச்சனைகள் போன்று இஸ்லாத்தில் எத்தகைய இனப்பிரச்சினைகளும் இருக்கவில்லை.

-

சேர் சி. பி. இராமசாமி ஐயர் -[EasternTimes, 22 டிசம்பர், 1944.]

இஸ்லாம் தோற்றுவித்த உன்னத மரபுகளில் ஒன்று நீதி மற்றும் நியாய உணர்வாகும்.குர் ஆனை நான் ஆய்ந்து படித்த போது அது அறிவுறுத்திய புரட்சிகரமான கொள்கைகள், வெற்று ஞனமாக அல்லாமல் வாழ்வின் நடைமுறை போதனையாக-நடைமுறை வாழ்வுக்கு இசைவானதாக , முழு உலகுக்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதை கண்டேன்.

சரோஜினி நாயுடு -[Letures on "The Ideals of Islam" see Speeches and writings of Sarojini Naidu.Madras 1918, P.167]

மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைதக் கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாயிருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மை போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்வதும்

எனத் தொடரும் அவரது பேச்சில்

இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க வகையில் அனுகியிருக்கிறதேன்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவப்பூர்வமாய் கூறுகிறேன். நான் அழுத்தமாய் சொல்கிறேன், நடைமுறைக்கு இசைவான இந்த செயல்பாடின்றி வேதாந்த கருத்துக்கள் எவ்வளவுதான் சிறப்பானதாக, பெருமைக்குரியதாக இருந்தாலும் பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே முடியும்.

சுவாமி விவேகானந்தர் -[Letters of Swami Vivekananda P.463]

தென் ஆபிரிக்காவில் உள்ள ஐரோப்பியர்கள் இஸ்லாம் பரவிவிடும் என்று பயப்படுவதாக சிலர் கூறினார்கள். இஸ்லாம் ஸ்பெயினுக்கு நாகரிகத்தை கற்று தந்தது. மொரோக்கோவுக்கும் ஒளி தந்தது. உலகுக்கு சகோதரத்துவம் எனும் கொள்கையை போதித்தது. தென் ஆபிரிக்காவில் உள்ளவர்கள் வெள்ளை இனத்தாருடன் சம உரிமை கோரக்கூடும் என்பதால் தென் ஆபிரிக்காவில் உள்ள ஐரோப்பியர்கள் இஸ்லாத்தின் வருகைக்கு அஞ்சுகிறார்கள். அவர்கள் நன்றாக அஞ்சலாம் . சகோதரத்துவம் என்பது பாவம் என்றால், கருப்பு நிறத்தவர்களுடன் சமத்துவத்திற்காக அவர்கள் அஞ்சினால் அந்த அச்ச்த்திற்கு காரணம் உண்டுதான்.

மகாத்மா காந்தி -[Mahathma Gandhi, quoted in Muhammed The Prophet of the Islaam: by Ramakrishna Rao. Page 8.]


வெற்றி கொள்ளப்பட்ட மக்கள் மீது வாள் முனையில் இஸ்லாத்தை முஸ்லிம் வெறியர்கள் திணித்தனர்" என்பது சில சரித்திர ஆசிரியர்கள் மிக சாதுர்யமாக மீண்டும் மீண்டும் சொல்லி வந்த செய்தியாகும் ஆனால் இந்த கருத்தோ கற்பனையே ஆகும்; அதுவும் அபத்தக் கற்பனையே ஆகும்.

-[De Lacy O'Leary, qIslam at the crossroads, London 1923, P.8]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikiquote.org/w/index.php?title=இசுலாம்&oldid=8614" இலிருந்து மீள்விக்கப்பட்டது