பிரெட்ரிக் எங்கெல்ஸ்
Appearance
அறிமுகம்
[தொகு]பிரடெரிக் எங்கெல்ஸ், ஒரு ஜெர்மானியர், மார்க்சிய மூலவர்களுள் ஒருவர், காரல் மார்க்சின் உயிர்த் தோழன், மார்க்சுடன் இனைந்து "கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கை" தயாரித்தவர். "குடும்பம், தனிச்சொத்து, அரசுடமை: ஆகியவற்றின் தோற்றம்", "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்", "கம்யூனிசக் கோட்பாடுகள்" போன்ற பல புத்தகங்களை எழுதியவர். காரல் மார்க்சின் மூலதனம் நூலை, அவரின் மறைவுக்குப் பிறகு வெளிவரச் செய்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்.
- சகல செல்வத்தினுடைய தோற்றுவாயும் உழைப்பே. உழைப்புதான் மனிதனையே உருவாக்கியது.[1]
- மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் இயற்கையைத் தனது சுற்றுச் சார்புக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே தனது தேவைக்கு ஏற்றவாறு இயற்கையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான். மணிதன் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை மாற்றி அமைக்க முயற்சிக்கும் போது, மனிதனை இயற்கை திருப்பி அடிக்கிறது.[2]
- கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகள் பற்றிய அறிவாகும்.[3]
- தத்துவார்த்த சிந்தனைத் திறமைகளை வளர்த்துக் கொள்ள "முந்தைய தத்துவ இயலைப் படித்து ஆராய்வதைத் தவிர வேறு விதமான வழிகள் இல்லை." [4]
- உயிரினங்களின் வளர்ச்சி விதியையை டார்வின் கண்டறிந்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்.[5]
இயங்கியல்
[தொகு]- இயக்கம் இல்லாத பொருள் எங்குமே ஒருபோதும் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது.
ஒரு பொருள் ஓய்வு நிலையில் உள்ளது சமநிலையில் உள்ளது என்பதெல்லாம் ஒப்பீட்டு அளவில்தான்.[6]
- மனித சிந்தனை வளர்ச்சியின் வரலாறு முழுவதிலும் ஊடுருவிச்செல்வதும் படிப்படியாக மனிதனின் மனத்தில் உணர்வைத் தோற்றுவிப்பதும் இயங்கியல் விதிகள்தாம்.[7]
முரண்
[தொகு]- முரண்பாடு எப்போது முடிவுக்கு வருகிறதோ அப்போது உயிர்ப்பு முடிந்து, மறைவு நிகழ்கிறது.[8]
சான்றுகள்
[தொகு]- ↑ மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம், பக்கம் 1
- ↑ மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்.
- ↑ மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள், தொகுதி 1, பக்கம் 139
- ↑ "இயற்கையின் இயக்க இயல்" பக்கம் 75
- ↑ மார்க்சின் உடல் அடக்கத்தின் போது ஆற்றிய உரை
- ↑ Anti During, page 70
- ↑ Anti During, page 15
- ↑ Anti During, page 135
பிற இணைப்புகள்
[தொகு]