காரல் மார்க்சு
Appearance
கார்ல் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5,1818, செருமனி – மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துகளும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் எங்கெல்ஸ் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ஐரோப்பாவில் அறுவடை நல்ல அல்லது கெட்ட பருவ நிலையைப் பொறுத்திருப்பதைப் போல, ஆசியாவில் அது நல்ல அல்லது கெட்ட அரசாங்கங்களைப் பொறுத்திருக்கிறது .
- நீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள் கருத்து.
- தத்துவ ஞானிகள் உலகத்தை இதுவரை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர். ஆனால், அதை மாற்ற வேண்டியதுதான் இப்போதுள்ள கடைமை.[1]
- கோட்பாடுகள் ஒன்றை ஒன்று துரத்தி வெளியேற்றின.
- மதம் மக்களுக்கு அபினாக விளங்குகிறது.
- நரகத்திற்கு இட்டுச் செல்லும் பாதை நல்ல நோக்கம் எனும் கற்களால் உருவாக்கப்பட்டது.
- காலம் மனித வளர்ச்சி நடைபெறுவதற்கான வெளி.
- ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.[2]
- சகலவிதமான அடிமைத்தனத்தையும் ஒழிக்காமல் மனித விடுதலை சாத்தியமாகாது.
- இயற்கையின் அழகான பன்முகத் தன்மைகளை, வற்றாத வளங்களை வியந்து போற்றுகிறீர்கள். ஒரு ரோஜா மலர் வயலட் பூவைப் போல மணக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட வளமிக்கதான மனம் மட்டும் ஒற்றைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதே.
- தொழிலாளர்களின் திறமையான உழைப்பிலேயே தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி இருக்கிறது.
- பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை.
- ஒவ்வொரு காலத்திலும் சமுதாயத்தில் தோன்றும் கருத்துகள், மதங்கள், கலை இலக்கியப் படைப்புகள், தத்துவங்கள் அனைத்தும் சமுதாய வளர்ச்சியின் பிரதிபலிப்புகளாகத்தான் தோன்றுகின்றன.
- மறைந்து போய்விட்ட மிருக ராசிகளை நிர்ணயிப்பதற்கு புதைபடிவ எலும்புகள் எவ்வளவு முக்கியத்துவமுள்ளவையோ, மறைந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரக் கருவிகளின் மீதமிச்சங்களும் அதே அளவு முக்கியத்துவமுள்ளவையாகும்.[3]
- உழைப்பு என்பது மனிதனும் இயற்கையும் இணைந்து பங்கேற்கிற ஒரு இயக்கம்.
- மனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல. மாறாக,, அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வை நிர்ணயிக்கிறது.
- வாழ்வதற்கும் எழுதுவதற்கும் எழுத்தாளன் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே… ஆனால் சம்பாதிப்பதற்காகவே அவன் வாழவோ எழுதவோ கூடாது. எழுத்தாளனுக்கு அவனது எழுத்து ஒரு கருவி அல்ல. அது தன்னளவிலேயே முடிந்த ஒரு இலக்கு, தேவைப்பட்டால் எழுத்து உயிர்பெற்றிருக்க தனது உயிரையும் அவன் தியாகம் செய்வான். (பத்திரிகை சுதந்திரம் குறித்து ஒரு அரசியல் விவாதத்திற்கு மார்க்ஸ் எழுதியது)
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
[தொகு]- இதுவரையிலான சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்க போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது.
- சமுதாய உற்பத்திப் பொருள்களை தன்வயமாக்கிக் கொள்ளும் ஆற்றலைக் கம்யூனிசயம் எவரிடமிருந்தும் பறிக்கவில்லை. உற்பத்திப் பொருள்களை தன்வயமாக்கிக் கொள்வதன் மூலம் பிறரது உழைப்பை அடிமைப்படுத்தும் ஆற்றலைத்தான் அவரிடமிருந்து பறிக்கிறது.
கூலியுழைப்பும் மூலதனமும்
[தொகு]- முதலாளித்துவ உற்பத்தி தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கிறது. இதனை உற்பத்தியின் மற்ற அம்சங்களுடன் இணைத்து சமூகத்தின் ஒட்டு மொத்த தன்மையை உருவாக்குகிறது. ஆனால் இந்த நிகழ்வு போக்கில் செல்வத்தின் ஆதாரங்களாக விளங்குகின்ற மண்ணையும் உழைப்பாளியையும் முதலாளித்துவம் சீரழிக்கிறது.
- முதலாளித்துவ அமைப்பு முறை தானாக நொறுங்கி வீழாது. தொழிலாளி வர்க்கத்தின் விடாப்பிடியான போராட்டங்களின் மூலமாகத்தான் அதனை வீழ்த்திட முடியும்.
- கூலியானது தொழிலாளி உற்பத்தி செய்யும் பண்டத்தில் அவருக்குரிய பங்கு அல்ல. ஏற்கெனவே இருந்துவரும் பண்டங்களில் எப்பகுதியைக் கொண்டு முதலாளி உற்பத்தித் திறனுள்ள ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்புச் சக்தியை வாங்குகிறாரோ, அப்பகுதியே கூலியாகும்.
மதம்
[தொகு]- மதம் என்பது இதயமற்ற உலகின் இதயத்துடிப்பு, அத்துடன் ஆன்மா இல்லாத நிலைமையில் ஆன்மாவாக உள்ளது. அது மக்களின் ஓப்பியம் (அபின்).
பெண்
[தொகு]- பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை. அழகான இனம் என்று குறிப்பிடப்படும் பெண்கள், அவர்களில் அழகற்றவர்களும் உட்பட சமூகத்தில் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே சமூக முன்னேற்றத்தை நாம் அளவிடமுடியும்.[4]
சான்றுகள்
[தொகு]பிற இணைப்புக்கள்
[தொகு]