மார்லன் பிராண்டோ
Appearance
மார்லன் பிராண்டோ (பிறப்பு: ஏப்ரல்-3-1924- மறைவு: ஜூலை-1-2004) த காட்ஃபாதர், அப்போகலிப்ஸ் நவ், ஆன் த வாட்டர் பிரண்ட் உட்பட பல படங்களில் நடித்த திரைப்பட நடிகர். இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இரு தடவை ஆஸ்கார் விருது வென்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- கிழக்கு நாடுகள் இப்படி வாடுவதற்கு நம்மைப்போன்ற மேற்குலக நாடுகளின் சுரண்டல் தான் காரணம். அதற்கு உகந்த அரசாங்கங்கள் அங்கே செயல் படுகின்றன.
- அமெரிக்க மனம் இதர மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதே இல்லை.
- நான் ஹாலிவுடில் இருக்க மிகப்பெரிய காரணமெல்லாம் இல்லை. எனக்கு இங்கே தரப்படும் பணம் தான் என்னை இங்கே இருக்க வைக்கிறது ! வேறொன்றும் இல்லை
- மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை கொண்டாடுகிறார்கள். உங்களை சந்திக்காமலே நீங்கள் அற்புதமானவர்கள் என்று நம்புவார்கள். அதே மக்கள் உங்களின் நிஜ வாழ்க்கையோடு சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக உங்களை வெறுப்பார்கள். மக்கள் தங்களுக்கான எதிரிகளை இழக்க விரும்புவதில்லை. அவர்களுக்கு பிடித்த வில்லன்கள் தேவைப்படுகிறார்கள். வெறுப்பதை காதலிக்கவும்,காதலிப்பதை வெறுக்கவும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு திட்டவும்,கொண்டாடவும் ஒரு நாயகன் எப்பொழுதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறான்.
- நம் சகோதரனுக்கு நாம் தோள் கொடுப்பவனாக இல்லாமல் போனாலும், குறைந்தபட்சம் அவன் தலை எடுப்பவனாக இல்லாமல் இருக்க வேண்டும்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ Speech for the Academy Awards written by Brando as it appeared in the New York Times (March 30, 1973)
வெளி இணைப்புக்கள்
[தொகு]