அன்னை தெரசா
Jump to navigation
Jump to search
அன்னை தெரேசா (Mother Teresa) (ஆகஸ்டு 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றிக் கொண்டே இருந்தார். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியை விரிவாக்கினார்.
மேற்கோள்கள்[தொகு]
- அன்பு செலுத்துங்கள் காலம் மிக குறைவாக இருக்கிறது
- நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?