உள்ளடக்கத்துக்குச் செல்

அன்புக்கரங்கள்

விக்கிமேற்கோள் இலிருந்து

அன்புக்கரங்கள் என்பது 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலமுருகன் எழுத்தில் கே. சங்கர் இயக்கினார். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

1. சிவராமன் (சிவாஜிகணேசன்) திருப்பதியைப் (நாகேஷ்) பார்த்து டேய் திருப்பதி நிமிர்ந்து நில்றா

முடியலியே சார் (திருப்பதி)

கடமையிலிருந்து தவறிய யாராக இருந்தாலும், சரி நிமிர்ந்து நிக்க முடியாது (சிவராமன்)[1]

2. தங்கையின் திருமணத்தைப் பற்றி சோதிடரிடம் பேசும்போது சிவராமன்;

கடல்ல இருக்கிற முத்து இடம் மாறினாதானே கடலுக்கும் பெருமை முத்துக்கும் பெருமை[1]

3. சிவராமன் தன் தங்கையிடம்

அம்மா ஒரு குடும்பம் பெருமையடையரதும் சிறுமையடையரதும் வீட்டுப் பெண்கள் கைலதான் இருக்கு[1]

4. மருத்துவர் செவிலியரின் செயலைக் கண்டிக்கும்பொது

மற்றவங்க புண்படும்படி இப்படி பேசலாமா, நாம கொடுக்குற மருந்த விட நோயாளிங்ககிட்ட நாம காட்டுற அன்புலதான் சீக்கிறம் குணமாகும்[1]

5. மனோரமாவின் கையைப் பிடித்ததற்காக பஞ்சாயத்தில் நிறுத்தப்படும் நாகேஷ் சொல்லும் பழமொழி

பஞ்சாயித்துக்கு வந்தா பாதி பொண்டாட்டி, அபராம் கட்டினா அரை பொண்டாட்டி, ஆக மொத்தம் ஒரு பொண்டாட்டி[1]

6. சிவாஜி கணைசனிடம் பொன்னம்மா

குஷ்டரோகிகூட ஒரு பெண் வாழ்திடலாம் ஆனால், குற்றவாளிகூட ஒரு பெண் வாழமுடியாது[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=அன்புக்கரங்கள்&oldid=37417" இலிருந்து மீள்விக்கப்பட்டது