அரிஸ்டாட்டில்

விக்கிமேற்கோள் இலிருந்து
Aathavan jaffna (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:04, 25 ஏப்பிரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (வி. ப. மூலம் பகுப்பு:இறந்த நபர்கள் சேர்க்கப்பட்டது)
பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது..

அரிஸ்டாட்டில் (அல்லது அரிசுட்டாட்டில் (Aristotle)) (கிமு 384 - மார்ச் 7, கிமு 322) ஒரு கிரேக்கத் தத்துவஞானியாவார்.

மேற்கோள்கள்

  • தன் அச்சங்களிலிருந்து மீண்டு வருகிறவன் தான் உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.
  • இடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும்.
  • நல்ல ஆரம்பம் வேலையை பாதி ஆக்கிவிடும்.
  • அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.
  • மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
  • பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
  • இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.
  • நம்முடைய நற்பண்புக்கும்,நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்.
  • மனித இனம் மேலும் வளர்ச்சி பெற்ற நிலையில் இல்லாததற்குக் காரணம், வெள்ளங்களும் மற்ற இயற்கைப் பேரழிவுகளும்தான்.
  • கனவானது தூக்க நிலையின் சிந்தனை.

வெளி இணைப்புக்கள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=அரிஸ்டாட்டில்&oldid=11140" இலிருந்து மீள்விக்கப்பட்டது