உள்ளடக்கத்துக்குச் செல்

அரிஸ்டாட்டில்

விக்கிமேற்கோள் இலிருந்து
பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது..

அரிஸ்டாட்டில் (அல்லது அரிசுட்டாட்டில் (Aristotle)) (கிமு 384 - மார்ச் 7, கிமு 322) ஒரு கிரேக்கத் தத்துவஞானியாவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • இடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும்.
  • நல்ல ஆரம்பம் வேலையை பாதி ஆக்கிவிடும்.
  • மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
  • பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
  • இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.
  • நம்முடைய நற்பண்புக்கும்,நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்.
  • மனித இனம் மேலும் வளர்ச்சி பெற்ற நிலையில் இல்லாததற்குக் காரணம், வெள்ளங்களும் மற்ற இயற்கைப் பேரழிவுகளும்தான்.
  • கனவானது தூக்க நிலையின் சிந்தனை.
  • தன் அச்சங்களிலிருந்து மீண்டு வருகிறவன் தான் உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.
  • அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.[1]
  • அநீதியைத் தாங்குவதைவிட அநீதியிழைப்பது மேல் என்று எவரும் சொல்லத் துணியார்.[2]
  • நமக்கு உள்ளேயிருந்து உணர்வதும், சிந்திப்பதும். விரும்புவதும், எழுச்சியளிப்பதும் எதுவோ அது தெய்விகமானது. ஆதலால் அழிவற்றது.[3]
  • ஒரு நகரம், நல்ல சட்டங்களால் ஆளப்பெறுவதை காட்டிலும், ஒரு நல்ல மனிதனால் ஆளப்பெறுதல் மேலாகும்.[4]
  • அழகு உலகிலுள்ள எல்லாச் சிபாரிசுக் கடிதங்களையும்விட மேலானது.[5]
  • பூரணமான அறிவுக்கு அடையாளமாயுள்ளது கற்பிக்கும் ஆற்றல்.[7]
  • தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கியிருக்கின்றனர். [8]
  • உண்மையை ஆராயும் கலையே தத்துவஞானம்.[9]
  • பொய்யினால் ஒருவன் அடையும் ஆதாயமெல்லாம் இதுதான். அவன் உண்மையைச் சொல்லும் போதும் எவரும் நம்பமாட்டார்.[10]
  • பொறுமை, நெஞ்சின் உறுதியைப் போலவே இருப்பதால், அது அதற்குச் சகோதரியாகவோ, மகளாகவோ இருக்க வேண்டும்.[11]
  • மகா ஞானியின் மூளையிலும் ஒரு மூலையில் மடமை தங்கியிருக்கும். [12]
  • சமூகத்தால் சீர்திருத்தப்பட்ட மனிதன் எல்லா விலங்குகளிலும் சிறந்தவன். அவன் சட்டமும் நீதியும் இல்லாமல் வாழ்ந்தால், அவனைப்போல் பயங்கரமானது வேறெதுவும் கிடையாது.[13]
  • கதிரவன் உதயமாகு முன்னால் எழுந்துவிடுதல் நலம், இத்தகைய பழக்கங்கள் ஆரோக்கியத்திற்கும். செல்வத்திற்கும். அறிவு விருத்திக்கும் நல்லவை.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 11-12. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 25-27. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 37-38. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 142-143. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 158-159. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 160. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 204-205. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 287-289. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 291-292. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 295. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  13. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 302. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 319-320. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=அரிஸ்டாட்டில்&oldid=36324" இலிருந்து மீள்விக்கப்பட்டது