உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

விக்கிமேற்கோள் இலிருந்து
(அல்பேர்ட் ஐன்ஸ்டீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிறு செயல்களிலும் உண்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  • அனைத்து மதங்களும் கலையும் அறிவியலும் ஒரே மரத்தின் கிளைகள்.
  • எந்தவொரு அறிவுள்ள முட்டாளும் விஷயங்களை பெரிதாகவும் சிக்கலானதாகவும் செய்திட இயலும். ஆனால், ஒரு மேதையால் மட்டுமே அவற்றை எளிதாகச் செய்ய முடியும்.
  • ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு ஒருவன் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்கிறான் என்றால், அவன் முழுமையான முத்தம் தரவில்லை என்று அர்த்தம்.
  • வெகு அதிகமாகப் படித்து தன் மூளையையும் குறைவாக பயன்படுத்துபவன் சிந்தனை என்ற சோம்பேறித்தனத்துக்கு சென்றிடுவான்.
  • சிறு செயல்களிலும் உண்மையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை.
  • கடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள்/முட்டாள்கள்.
  • கடவுள் அண்டத்தைப் படைத்த போது அதை எவ்வாறு படைப்பது என்று விரும்பித் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவருக்கு இருந்ததா?
  • ஆழமான மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான். இது ஒரு வகையான புதிய மதம். இயற்கையிடம் நான் ஓர் அற்புதமான கட்டமைப்பைக் காண்கிறேன்; அதை மிகக்குறைந்த அளவிலேயே நம்மால் புரிந்து கொள்ள முடியும், அந்தப் புரிதல் சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு நபரின் உள்ளத்திலும் ஓர் உணர்வை உண்டாக்குகிறது. இது ஓர் உண்மையான மத உணர்வாகும். இதற்கும் மதவாதிகள் கூறும் மர்மமான மதப் புரிதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
  • தனி நபராகக் கருதப்படும் ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கையில்லை, இந்த நம்பிக்கையின்மையை நான் என்றும் மறுத்ததும் கிடையாது. அதற்கு மாறாக அதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன்.
  • மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதே விஞ்ஞானிகளின் முழு முதற் கடமை. அந்த வேலைதான் எல்லாவற்றையும் விட இப்போது தலையானது.
  • வெற்றி பெற்ற மனிதராக முயற்சிப்பதை விட, மதிப்பு மிக்க மனிதராக முயற்சி செய்யுங்கள்.
  • அமைதியை வலுவாக கட்டுப்படுத்திக் கொண்டு வர முடியாது, அது புரிந்துணர்விலேயே நீடிக்கும்.
  • எண்ணக்கூடியனவெல்லாம் எண்ணத்தகுந்தனவல்ல. எண்ணத்தகுந்தனவெல்லாம் எண்ணக்கூடியனவல்ல
  • உண்மைகள் தேற்றங்களுடன் பொருந்தவில்லை என்றால் உண்மைகளை மாற்றுங்கள்.
  • நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதில்லை ஏனெனில் அது தேவையானபோது வந்தே தீரும்
  • அறிவியலோடு கலக்காத மதம் குருட்டுத்தனமானது.
  • வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், வாழ்க்கையில் புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகதான் இருக்கமுடியும்.
  • ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவாரேயானால், அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சித்ததில்லை என்று பொருளாகும்.
  • எவனும் எளிமையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். எளிய வாழ்க்கையே சிறப்பானது. எளிமையான இல்லத்திலே, எல்லாரும் விரும்பும் எளிமை விரும்பியாக வாழ கற்றுக்கொண்டால் மக்களும் அப்படி வாழ்பவரைப் பின்பற்றத் தயங்க மாட்டார்கள்.[1]
  • என்னுடைய அகவாழ்வும், புறவாழ்வும் என்னுடைய இனத்தாரின் இறந்தவரும், இருப்பவரும் உழைப்பினலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் நாள்தோறும் உணர்கிறேன். பிறர் உழைப்பால் நான் எவ்வளவு நன்மையைப் பெற்றாேனோ, அத்துணை நன்மையை நான் பிறருக்குச் செய்ய எவ்வளவு உழைக்க வேண்டும்.[2]

மூன்றாம் உலகப்போர்

[தொகு]

ஒரு முறை ஐன்சுடைனிடம் மூன்றாம் உலகப்போரில் எவ்விதமான ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறினார், “ மூன்றாம் உலகப்போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். ஆனால் நான்காம் உலகப்போர் எவ்விதமான ஆயுதங்களால் இடப்படும் தெரியுமா? கற்களாலும் குச்சிகளாலும்! “

அல்பேர்ட் ஐன்ஸ்டீன்-இடம், கம்பி இல்லா தந்தியை பற்றி விளக்கக் கோரிய போது, அவர் சொன்னார், " பாருங்கள், தந்தி என்பது மிக மிக நீளமான பூனையைப் போன்றது. நீங்கள் அதன் வாலை நியு யார்க் நகரில் இழுத்தால், அதன் தலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருமும். உங்களுக்கு புரிகிறதா? மற்றும் கம்பி இல்லா தந்தி அதே முறையில் செயல்படுகிறது: நீங்கள் இங்கே இருந்து சமிக்ஞையை அனுப்புங்கள், அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இதில் பூனை கிடையாது."

தேர்வு

[தொகு]
  • மரம் ஏறுவதுதான் தேர்வுமுறை என்றாகிவிட்டால், மீன்கள் அதில் தோற்றுப்போகும்; வாழ்நாள் முழுவதும் தாம் முட்டாள் என்ற என்னத்துடனேயே அவை வாழ்ந்து மடியும்.[3]

அரசியல்

[தொகு]
  • அரசியலை விட எனக்கு சமன்பாடுகளில் விருப்பம்; ஏனெனில், அரசியல் தற்காலத்திற்கு மட்டுமே - ஒரு சமன்பாடோ என்றென்றும்.[4]

முதலாளித்துவம்

[தொகு]
  • இன்றைய முதலாளியச் சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் தீமைக்கான உண்மையான காரணம். [5]

சான்றுகள்

[தொகு]
  1. என். வி. கலைமணி (1999). ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 9-41. பாரதி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. ஒடுக்குமுறைத் தேர்வுகள் (கட்டுரை), சமஸ், இந்து தமிழ் 2020 சனவரி 31
  4. today in science
  5. மன்த்தி ரிவ்யு இதழில் 1949 இல் எழுதிய "Why Soclisam?" என்ற கட்டுரையில்

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆல்பர்ட்_ஐன்ஸ்டைன்&oldid=37714" இலிருந்து மீள்விக்கப்பட்டது