ஔவையார்
Appearance
(அவ்வையார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- தேவர் குறளும் திருநான் மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகமும் எனப்படும்
- ஆலயம் தொழுவது சாலமும் நன்று
- தீயவற்றை வேண்டுமென்று விரும்பிச் செய்யாதே; பிறர் வேண்டினாலும் செய்யாதே.
- நல்ல செயல்களை நீயே முன்னின்று செய்.
- மனம் அறிய உண்மையாக வாழ்வது நேர்மையான வாழ்வாகும்.
- நாட்டின் நன்மை கருதி வாழ்வதுதான் நாட்டுப்பற்று.
- எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ அவற்றினால் துன்பம் இல்லை.
- கற்றத்தாரோடும் ஊராரோடும் பயன்படும்படி வாழ்வாயாக.
- உயர் குணத்தை என்றும் கைவிடாதிருப்பாயாக.
- பண்புகளுடன் கூடிய சிறந்த செயல்களை மறவாமல் செய்வாயாக.
- பொய்யுரைகளை மெய்யுரை போல பேசாதே.
- கேட்பதற்கு ஐயம் நீங்கும்படி தெளிவாகச் சொல்லி விளங்க வை.