ஔவையார்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
மெரினா கடற்கரையில் இருக்கும் ஔவையார் சிலை

ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • தேவர் குறளும் திருநான் மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகமும் எனப்படும்
  • ஆலயம் தொழுவது சாலமும் நன்று
  • தீயவற்றை வேண்டுமென்று விரும்பிச் செய்யாதே; பிறர் வேண்டினாலும் செய்யாதே.
  • நல்ல செயல்களை நீயே முன்னின்று செய்.
  • மனம் அறிய உண்மையாக வாழ்வது நேர்மையான வாழ்வாகும்.
  • நாட்டின் நன்மை கருதி வாழ்வதுதான் நாட்டுப்பற்று.
  • எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ அவற்றினால் துன்பம் இல்லை.
  • கற்றத்தாரோடும் ஊராரோடும் பயன்படும்படி வாழ்வாயாக.
  • உயர் குணத்தை என்றும் கைவிடாதிருப்பாயாக.
  • பண்புகளுடன் கூடிய சிறந்த செயல்களை மறவாமல் செய்வாயாக.
  • பொய்யுரைகளை மெய்யுரை போல பேசாதே.
  • கேட்பதற்கு ஐயம் நீங்கும்படி தெளிவாகச் சொல்லி விளங்க வை.


வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஔவையார்&oldid=13935" இருந்து மீள்விக்கப்பட்டது