உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன் பிராங்க்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஆன் பிராங்க் தனது பள்ளியில்

ஆன் பிராங்க் (Anne Frank; 1929 சூன் 12 – 1945 சனவரி 6)[1] இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு யூதச் சிறுமி. இவர் தான் எழுதிய நாட்குறிப்புகளுக்காக அறியப்படுகிறார். இரண்டாம் உலகப்போரின் போது செர்மனியின் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்ததால் இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தது. பின்னர் அடையாளம் தெரியாத ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அங்கு இச்சிறுமி இறந்து விட்டார். மறைந்து வாழ்ந்த போது இவர் எழுதிய நாட்குறிப்புகள், இவர் இறந்த பின் இவரது தந்தையால் நூலாக வெளியிடப்பட்டது. இந்நூல் இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் யூதர்கள் பட்ட அவலங்களை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

இவரின் வரிகள்

[தொகு]
  • இனத்தின் பெயரால் எந்த மனிதரும் இனி சாகக்கூடாது, எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் பூமியில் போர் நிகழக்கூடாது போர்களில் உயிர் இழந்த கடைசி மனிதர்களாக நாங்கள் இருக்க வேண்டும்.[1]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


மேற்கோள்கள்

[தொகு]
  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆன்_பிராங்க்&oldid=37188" இலிருந்து மீள்விக்கப்பட்டது