உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானிஸ்தான் பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டுப் பழமொழிகள் தொகுக்கப்படுள்ளன

  • கூர்மையான முள் இளமையிலிருந்தே அப்படி யிருப்பது.
  • நன்றியற்ற மகன் தந்தையின் முகத்திலுள்ள பரு; அதை அப்படியே விட்டிருந்தால் விகாரம், கிள்ளியெறிந்தால் வலி.
  • தூக்கம் வந்து விட்டால், தலையணை தேவையில்லை; காதல் வந்து விட்டால், அழகு தேவையில்லை.
  • விருந்துச் சாப்பாடு கடனாக அளிக்கப்படுவது.
    [நாமும் திரும்ப விருந்தளிக்க வேண்டும்.]
  • வைசூரி விளையாடிய பிறகு தான், பெற்றோர்கள் குழந்தையைத் தங்கள் குழந்தையாகக் கணக்கிட வேண்டும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆப்கானிஸ்தான்_பழமொழிகள்&oldid=37824" இலிருந்து மீள்விக்கப்பட்டது