ஆர்மீனியா பழமொழிகள்
Appearance
இப்பக்கத்தில் ஆர்மீனியா பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- உலகம் என்ற சாணையில் மனிதன் ஒரு கத்தி.
- உலகம் என்ற பானையில் மனிதன் ஒரு கரண்டி.
- உனக்கு ஓர் இரகசியம் தெரியவேண்டுமா? ஒரு குழந்தை, பயித்தியக்காரன், குடிகாரன், அல்லது ஒரு பெண்ணிடம் கேட்டுப் பார்.
- ஒரு நல்ல பெண் ஏழு பிள்ளைகளுக்கு மேல்.
- மகள் இருந்தால், தாய்க்குச் செலவு இருந்து கொண்டே யிருக்கும்.
- மனைவியைத் தேர்ந்தெடுக்கும்பொழுது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கையில் இளைஞனின் பார்வை வேண்டும்.
- வெளியே விளக்கு வேண்டும், வீட்டிலே அனல் வேண்டும்.
(விளக்கு-வழி காண்பதற்காக; அனல்-குளிர் காய்வதற்காக.)