ஆல்பெர் காம்யு
Jump to navigation
Jump to search

ஆல்பெர் காம்யு (Albert Camus) (நவம்பர் 7, 1913 - ஜனவரி 4, 1960) நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர். 1957இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். 1960 இல் கார் விபத்தில் காலமானார். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- சமூகம் தான் என்ன சொல்கிறதோ அதைச் சமூகமே நம்புவதில்லை.
- மனிதன் இயல்பாகவே ஒரு சமூக விலங்கு என்று நான் எணணுவதில்லை. உண்மையைச் சொன்னால், இதற்கு நேரெதிராகவே எண்ணுகிறேன்.
வார்த்தைகள்[தொகு]
- கற்பனைத் திறன் தூங்கிவிடும் போது வார்த்தைகள் தமது பொருளை இழந்து விடுகின்றன.
- சீர்திருத்தப்பட வேண்டிய ஒரு தவறான வழக்கம் அல்லது தணிக்கப்படவேண்டிய ஒரு துயரம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருப்பதற்கு மௌனம் அல்லது மொழிகளின் சூழ்ச்சி பங்களிக்குமானால், வார்த்தைப் போர்வையின் கீழ் மூடிமறைக்கப்பட்ட அந்த அசிங்கத்தை உரக்கப் பேசி வெளிப்படுத்திக் காட்டுவதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை.[1]
மரண தண்டனை[தொகு]
- குற்றதை விட தண்டனை இன்னும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது.[2]
- தனிநபரின் உடலுக்கு புற்றுநோய் எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டதுதான் அரசியல் சமூகத்திற்கு மரண தண்டனையும்.[3]
- மரண தண்டனை பயனற்றது மட்டுமல்ல, அது நிச்சயம் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.[4]
- மரண தண்டனையைப் பொறுத்தவரையில் அது கற்பனைத் திறத்தால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு தண்டனை, எனது பகுத்தறிவால் கண்டனம் செய்யப்படும் அலட்சியம் சார்ந்த ஒரு பிழை என்பதைத் தவிர வேறு எதையும் காண முடியாதவனாகவே பல ஆண்டு காலம் நான் இருந்திருக்கிறேன்.[5]
- மரண தண்டனை முன்னுதாரணமாக விளங்குகிறது என்பதை நான் மறுக்கிறேன். அந்தத் தண்டனை மேன்மையானது எதையும் விட்டு வைக்காத நிலைமைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற கொடூரமான ஓர் அறுவை சிகிச்சையாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.[6]
சான்றுகள்[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]