உள்ளடக்கத்துக்குச் செல்

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

விக்கிமேற்கோள் இலிருந்து
பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள்..

ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalamஅக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் (ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

மேற்கோள்

[தொகு]

அக்னிச் சிறகுகள்

[தொகு]
அக்னிச் சிறகுகள்: ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் பற்றிய சுயசரிதை (1999) ISBN 8173711461
 • நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
 • தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.
 • நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
 • நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
 • சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
 • கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களை தூங்க விடாமல் செய்வது.
 • கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள் தோற்கிறார்கள்.
 • அல்லாவின் ஆணை இல்லாமல் எதுவுமே நமக்குக் கிடைக்காது! அவரே நமது பாதுகாவலன்! என் மகனே! அல்லாவிடம் நம்பிக்கைக் கொள்!.
 • அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
 • சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

பிற

[தொகு]
 • உங்கள் பாடசாலை சூரியனை 121 முறை சுற்றி 122 ஆவது முறை சுற்றிக் கொண்டிருக்கும் பெருமைக்குரியது.
  • 2012இல் இலங்கையின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு வருகை தந்து உரையாற்றும் போது கூறியது.
 • பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள்.
 • பயந்தால் வரலாறு படைக்க முடியாது.
 • ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும் போது, தான் காண்பதை தவராக எடைப்போடக் கூடும். பெறும்பாலானோர்களின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால் தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.
 • நாம் எல்லோரும் ஒரு தெய்வீக நெருப்பாகத் தான் பிறந்துள்ளோம். நாம் அந்த நெருப்பில் நமது சிறகுகளைக் கொடுத்து அதனுடைய நன்மைகளை உலகில் நிரப்ப முயற்சி செய்ய வேண்டும்.
 • இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!.
 • கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை உழைப்பிற்கான ஒய்வை! பாதைக்கான ஒளியை!.
 • ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்!.
 • கால எல்லையைத் தவிர வேறு எந்த வித்த்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.
 • எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவரம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்.
 • அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.
 • வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
 • நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உணைமையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்.
 • காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!
 • ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல, உன்னைப் போலச் சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.
 • கடவுள், நம்மைப் படைத்தவர், நம்முடைய மனம் மற்றும் குணங்களில், உறுதி மற்றும் திறன்களை பெருமளவிற்குச் சேர்த்து வைத்துள்ளார். பிரார்த்தனைகளின் மூலம் இந்தச் சக்திகளை நாம் அடையவும் வளர்த்துக் கொள்ளவும் முடியும்.

பிற இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆ._ப._ஜெ._அப்துல்_கலாம்&oldid=14269" இலிருந்து மீள்விக்கப்பட்டது