இங்கிலாந்து பழமொழிகள்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

இதில் இங்கிலாந்து நாட்டில் வழங்கப்படும் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

 • அரசர், கெய்ஸர், பிரபு, சட்டங்கள் ஆகிய அனைத்திற்கும் மேற்போனது காதல்.
 • அவசரக் காதல் சீக்கிரம் சூடாகி, சீக்கிரம் குளிந்து விடும்.
 • அழகான பெண்ணும், நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும்.
 • எல்லா இடங்களிலும் கண்களின் பாஷை ஒன்று தான்.
 • ஒருபெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்.
 • காதல்தான் காதலுக்குப் பரிசு
 • காதலின் இனிமைகளில் கண்ணீர் கலந்திருக்கும்
 • காதலுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை.
 • காதலுக்காக உயிரை விடுபவர்கள் அளவுக்கு அதிகமாகக் காதலிப்பவர்கள்.
 • துருக்கியரைப் பற்றியும், போப்பாண்டவரைப் பற்றியும் பேச்சு வருகிறது; ஆனால் எனக்குத் தொந்தரவு கொடுப்பவன் என் அண்டை வீட்டுக்காரன்
 • நண்பர்கள் இல்லாமல் நாம் வாழலாம், அண்டை அயலார் இல்லாமல் வாழ முடியாது.
 • பத்து வயதில் பெண் தேவகன்னியா யிருப்பாள், பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போலிருப்பாள், நாற்பதில் சயித்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்.
 • பிச்சைக்காரனாக வாழ்வதைவிட, பிச்சைக்காரனாக மடிவது மேல்.
 • பெண்களுக்கும், குருமார்களுக்கும், கோழிகளுக்கும் எவ்வளவு இருந்தாலும் போதாது.
 • பெண்ணின் முன்பாகத்திற்கும் கழுதையின் பின்பாகத்திற்கும், பாதிரியாரின் எல்லாப் பாகங்களுக்கும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
 • மற்றவர்களுடைய பெண்களிடத்திலும், பணத்தினிடத்திலும் விளையாட வேண்டாம்.
 • முத்தங்கள் திறவுகோல்கள்.
 • விகாரமான ஸ்திரீ வயிற்றுவலி, அழகுள்ளவள் தலைவலி.