இடி அமீன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
Idi Amin -Archives New Zealand AAWV 23583, KIRK1, 5(B), R23930288.jpg
கேலிச்சித்தித்தில் இடி அமீன்

இடி அமீன் (Idi Amin Dada, 1924–ஆகஸ்ட் 16, 2003) உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  • உங்கள் மீது சில ராக்கெட்டுகளைப் பாய்ச்சப்போகிறேன். மக்களுக்கு சுகாதாரத்தைப் போதிப்பது மாணவர்களாகிய உங்களது கடமை. நீங்கள் சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அதைச் செய்ய முடியும். இப்பொழுது மேகநோய் (வி. டி.) விகிதம் அதிகரித்திருக்கிறது. உங்களுக்கு அந்த நோய் இருக்குமானால் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். உங்களை முதலில் சரிப்படுத்தக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நமது மொத்த ஜனத்தொகைக்கும் அந்த நோய் பரவிவிடும். மாணவ, மாணவிகளான உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். உங்களுக்கு அந்த நோய் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.[1]
  • இரண்டாவது உலகப் போரின்போது ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களை தீயிட்டுக் கொன்றது சரியான காரியம் என்று முன்பு சொன்னேன். நான் சொன்னது சரிதான் என்பதை உலகம் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 8. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இடி_அமீன்&oldid=36900" இருந்து மீள்விக்கப்பட்டது