இராஜதந்திரி
Jump to navigation
Jump to search
இராஜதந்திரி என்பவர் ஒரு அரசியல் நிபுணர் ஆவார். பொதுவாக இவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிற அரசுகள் அல்லது சர்வதேச அமைப்புகளுடன் உறவைப் பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை அல்லது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஒரு அரசு அல்லது ஒரு சர்வதேச அரசு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட நபர் ஆவார்.
மேற்கோள்கள்[தொகு]
- அரசாங்கத்தின் மதிப்பு நாளடைவில், அதில் அங்கம் வகிக்கும் தனி நபர்களின் தகுதியேயாகும். -ஜான் ஸ்டூவர்ட் மில்[1]
- கண்ணியமான இராஜதந்திரம் என்பது, தனிப்பட்டவர்களுடைய தாழ்ந்த மனப்பான்மையைப் பொது நன்மைக்காக: சாதுரியமாகப் பயன்படுத்தலாகும். - லிங்கன்[1]
- உண்மையான இராஜதந்திரம், ஒரு தேசிய சமூகத்தை அது இன்றுள்ள நிலையிலிருந்து அது இருக்கவேண்டிய நிலைக்கு மாற்றும் கலையாகும். -ஆல்ஜெர்[1]
- உண்மையான அரசியல் நிபுணனுக்கும் போலியானவனுக்கும் உள்ள பெரும் வேற்றுமைகள் இவை ஒருவன் எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்கிறான்; மற்றவன் நிகழ்காலத்தை மட்டும் பார்க்கிறான். ஒருவன் நிலையான தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டு முடிவற்ற காலத்திற்காக உழைக்கிறான். மற்றவன் சமயோசித தந்திரத்தைக் கையாண்டு, இன்று ஒரு நாளைக்காக வேலை செய்கிறான். -பார்க்[1]
- நன்னெறிக்கு எவை தேவையோ, அவைகளை உண்மையான இராஜதந்திரம் ஏற்றுக்கொள்ள வேண்டும், -பார்க்[1]
- இராஜதந்திரிகளுக்கு இருக்கவேண்டிய மூன்று இலட்சியங்களாவன; உடைமைகளைப் பெற்றிருப்பவர்களுக்குப் பாதுகாப்பு, புதிதாக உடைமைகள் தேடுவோருக்கு வசதி, மக்களுக்குச் சுதந்தரமும் நம்பிக்கையும். - காலெரிட்ஜ்[1]
- அறன்.அறிந்து ஆன்றமைந்த சொல்லான் எஞ் ஞான்றும்
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. -திருவள்ளுவர்[1] - முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். திருவள்ளுவர்[1] - கோல்அஞ்சி வாழும் குடியும் குடிதழிஇ
ஆலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின்
கடைமணிபோல் திண்ணியான் காப்பும்.இம் மூன்றும்
படைவேந்தன் பற்று விடல். - திரிகடுதம்[1]